இப்படி இருந்தா விடுவமா.. கஸ்டமர்கள் கும்பிடு.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படியாக வோடபோன் ஐடியா நிறுவனமானது, அதன் வேல்யூ ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் மாதத்துக்கு வெறும் ரூ.149 செலவில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ், 24 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. விவரம் இதோ.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், வேல்யூ திட்டங்களின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதிக வேலிடிட்டியை கஸ்டமர்களுக்கு வழங்கி வருகின்றன. இதுபோன்ற வேல்யூ ரீசார்ஜ் திட்டங்களில் (Value Recharge Plan) டேட்டா குறைவாகவே இருக்கும்.

இருப்பினும், வோடபோன் ஐடியா நிறுவனமானது, ஜியோவுக்கு நிகரான டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை கம்மி பட்ஜெட்டில் கொடுத்துள்ளது. மாதத்துக்கு ரூ.149 செலவில் கிடைக்கும் இந்த திட்டத்தின் சலுகைகள் அதிக லாபத்தை தரக்கூடயதாகவே இருக்கிறது. முதலில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்த்து விடுவோம்.
வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இதுவொரு ப்ரீபெய்ட் திட்டமாகும் (Prepaid Plan). முழுக்க முழுக்க வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொண்டிருக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம்.

இதை நாளொன்றுக்கு கணக்கிட்டால், 100 வீதம் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதுபோக 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் போஸ்ட் கோட்டா கம்ளிஷன் (Post Quota Completion) டேட்டா சலுகை கிடையாது. இதனால், 24 ஜிபிக்கு பிறகு டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆகவே, 1 எம்பிக்கு 50 பைசா வீதம் வசூலிக்கப்படும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகை முடிந்த பிறகு லோக்கலுக்கு 1 ரூபாயும், எஸ்டிடிக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) சந்தாவை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த சந்தா மூலமாக ஆஜ் டக் (Aaj Tak), ஏபிபி (ABP), டிஸ்கவரி (Discovery) உள்ளிட்ட ஆப்கள் மற்றும் 350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமே இருந்தால் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கம்மியான விலையில் நல்ல சலுகைகளை கொடுக்கும்.
இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.149 மட்டுமே செலவாகிறது. இருப்பினும, 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், டேட்டா தவிர வேறு எந்தவொரு ரீசார்ஜ்க்கும் தேவை இருக்காது. ஒரு வேளை தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், வோடபோனில் ரூ.1449 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல பின்ஞ் ஆல் நைட் டேட்டா, விஐ ஹீரோ, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற கூடுதல் சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். அதேபோல விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகையும் உள்ளது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் இந்த திட்டத்துக்கும் பொருந்தும். 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








