இதுக்குமேல முடியாது.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!
ஜியோவுக்கு நிகராக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்கவிருக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் முழு விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு ரூ.149 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா சலுகையோடு முதல் திட்டம் தொடங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இந்த திட்டத்தில் 24 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகையாகும். அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ்கள் சலுகைகள் மற்றும் 3600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) ஆப் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், ரூ.149ஆக இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்திலும் விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகளை பெறலாம்.

வோடபோன் ஐடியா ரூ 2999 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் (Prepaid Plan) 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும்.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 850 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதை தினசரி லிமிட் இல்லாமல், பயன்படுத்தலாம். முந்தைய திட்டங்களை போலவே விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப்பை பயன்படுத்தி கொள்ள முடியும்.
வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா பெற்று கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ள முடியும்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் மற்றும் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விஐ ஆப்பில் ரீசார்ஜ் செய்தால், ரூ.75 தள்ளுபடி கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 3199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3199 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா வருகிறது. அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
அன்லிமிடெட் வாய்ஸ்கள், விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் ( Amazon Prime Video Mobile) சந்தா வழங்கப்படுகிறது. அதேபோல பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் சலுகையை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








