Vodafone விஸ்வரூபம்.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களே நம்ப முடியாதபடி மாதாந்திரம் ரூ.149 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.241 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டியும் கொடுக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வருகின்றன.
மிகவும் கம்மியான விலையில் அதிகப்படியான வேலிடிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பக்காவான தேர்வாக இருக்கும். ஆனால், டேட்டாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் சரியாக இருக்காது. ஆனால், வாய்ஸ் கால்களை 6 மற்றும் 12 மாதங்கள் வரையில் லாபகரமாக பயன்படுத்தலாம்.

வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) தினசரி டேட்டா சலுகை மட்டும் கிடையாது. ஆனால், லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை வருகிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
அதாவது, இந்த வோடபோன் ஐடியா திட்டத்தை (Vodafone Idea Plan) பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டாவுக்கு (Daily Data) பதிலாக 24 ஜிபி டேட்டாவானது மொத்தமாக கொடுக்கப்படும். இந்த லம்ப்-சம் டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் லிமிட் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், இந்த திட்டத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது. ஆகவே, 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த டேட்டா சலுகை மட்டுமே குறைவாக இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால் சலுகை வருகிறது.

மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம். இதற்காக 3,600 எஸ்எம்எஸ் மொத்தமாக வழங்கப்படுகிறது. இந்த 2 சலுகைகளையும் 365 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு முன்னதாக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) ஆப் சந்தா கிடைத்தது. ஆனால், இப்போது வழங்கப்படவில்லை.
இந்த வோடபோன் ஐடியா திட்டத்துக்கு மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.149 மட்டுமே தேவைப்படுகிறது. இதேபோல கம்மியான விலையில் தினசரி டேட்டா சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் மிகவும் மலிவான விலைக்கு 180 நாட்களுக்கு சலுகைகளை வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): முந்தைய திட்டத்தை போலல்லாமல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. 270 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். 100 எஸ்எம்எஸ்கள் நளொன்றுக்கு கிடைக்கிறது.
முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு கூடுதலாக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications