வெச்சான் பாரு வோடபோன்.. வெறும் ரூ.179 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோவுக்கு நிகராக வெறும் ரூ 179 மதிப்புள்ள திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி சலுகையையும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. இதேபோல ரூ.200க்கும் கீழ் அதிக சலுகைகளை கொண்ட திட்டங்களை பற்றி இப்போது பார்க்க போகிறோம்.
வோடாபோன் ஐடியா ரூ 98 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 98 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் 200 எம்பி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகை மட்டும் கொடுக்கப்படவில்லை.

வோடாபோன் ஐடியா ரூ 151 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 99 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி பிரியர்களுக்கு பட்ஜெட்டில் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதோடு 8 ஜிபி டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
வோடாபோன் ஐடியா ரூ 155 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 155 Plan Details): இந்த ப்ரீரெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
வோடாஃபோன் ஐடியா ரூ 179 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 179 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம்.

அதேபோல 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi movies and TV) ஆப் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் 200+ டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களை பார்த்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா ரூ 195 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 195 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளோடு விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா ரூ 198 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 198 Plan Details): இந்த திட்டத்தில் 30 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு 500 எம்பி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ரூ 198 மதிப்பிலான டாக்டைம் கிடைக்கிறது. இதன் மூலம் 2.5 பைசா வீதம் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

வோடாபோன் ஐடியா ரூ 199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி வீதம் 18 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இதுபோக விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








