மினிமம் ரீசார்ஜ்.. இனிமே வெறும் ரூ.179 போதும்.. இறக்கிய வோடபோன் ஐடியா.. சிம் ஆக்டிவுக்கு ஜியோவுல கூட இது இல்ல!
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமே கொடுக்காத விலைக்கு வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. சிம் ஆக்டிவுக்கு இதைவிட மலிவான திட்டம் கஸ்டமர்களுக்கு கிடைக்காது. வெறும் ரூ.179 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது. இந்த மினிமம் ரீசார்ஜ் திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.
டெலிகாம் கட்டணங்கள் விலை அதிகரித்த பிறகு 2 சிம் கார்டுகள் வைத்திருக்கும் கஸ்டமர்கள் படாதபாடு படுகின்றனர். ஏனென்றால், மினிமம் ரீசார்ஜ் கட்டணமே கிட்டத்தட்ட ரூ.200-க்கு கிடைக்கிறது. இதனால், மாதாமாதம் ரீசார்ஜ்க்கு மட்டுமே குறைந்தது ரூ.400 செலவாகிவிடுகிறது. சில நிறுனத்தின் கஸ்டமர்களுக்கு கூடுதலாக செலவாகவும் வாய்ப்புள்ளது.

ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக வெறும் ரூ 179 விலைக்கு மினிமம் சிம் ஆக்டிவ் திட்டத்தை கொடுக்கிறது. ஜியோவில் ரூ.189 விலைக்கு திட்டம் ஆரம்பிக்கிறது. ஆனால், இந்த வோடபோன் ஐடியா திட்டம் அதைவிட ரூ.10 விலை குறைவாக கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் எப்படி?
வோடபோன் ஐடியா ரூ 179 திட்டம் சிம் ஆக்டிவ் (Vodafone Idea Rs 179 Plan SIM Active): இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்களானது அன்லிமிடெட் சலுகையில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களாக (Roaming Call) உங்களுக்கு கிடைக்கிறது.
டேட்டாவை பார்க்கையில், 1 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. இது லம்ப்-சம் டேட்டாவாகும். ஆகவே, இதற்கு மேல் டேட்டா கிடைக்காது. அதேபோல போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது. எஸ்எம்எஸ் சலுகைளை பார்க்கையில், லம்ப்-சம் சலுகையில் 300 கொடுக்கப்படுகிறது. இந்த எஸ்எம்எஸ்களுக்கு மேல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இப்போது, ஜியோ நிறுவனத்தில் கிடைக்கும் ரூ 189 ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த ஜியோ திட்டமும் ஆரம்ப விலையில் கிடைப்பதால், மினிமிம் சிம் ஆக்டிவ் திட்டமாக இருக்கிறது. இது வோடபோன் ஐடியா திட்டத்தைவிட ரூ.10 விலை குறைவாக கிடைத்தாலும்.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளையும், லம்ப்-சம் சலுகையில் 300 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது. ஆனால், டேட்டாவில் மாற்றம் இருக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைத்தால், இந்த திட்டத்துக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல இந்த ஜியோ மினிமம் சிம் ஆக்டிவ் திட்டத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை இருக்கிறது. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகும் ஜியோ கஸ்டமர்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio Prepaid Plan) டேட்டாவில் கூடுதல் சலுகைகளை கொடுத்து கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது.
அதேபோல வேலிடிட்டியிலும் கூடுதலாக 4 நாட்களை பெற்று கொள்ளலாம். அதாவது, முந்தைய திட்டத்தில் 24 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது, ஆனால், இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிட்டி கிடைக்கிறது. ஆகவே, சலுகையில் ஜியோ முன்னிலையில் இருக்கிறது. ஆனால், விலைக்கு ஏற்பவே அந்த சலுகைகள் கிடைக்கின்றன. இருப்பினும், வோடபோனிலேயே கம்மி விலை திட்டம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








