Home
News

மறுபடியும் ரூ.179-க்கு ரீசார்ஜ்.. தீபாவளி ட்ரீட் கொடுத்த Vi சிம் கார்டு.. 25 நாட்கள்.. 3 வாய்ஸ் ஒன்லி பிளான்!

84 நாட்கள் வேலிடிட்டி, 336 நாட்கள் வேலிடிட்டி, 365 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே கிடைத்துவந்த வாய்ஸ் ஒன்லி திட்டங்களை, 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டியிலும் கொடுக்க டிராய் உத்தரவிட்டது. இதன்படி ஏர்டெல் நிறுவனம், திட்டங்களை கொடுத்தது. இப்போது, வோடபோன் ஐடியாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டது.

ரூ.179 விலைக்கு 25 நாட்கள் வேலிடிட்டியை களமிறக்கி இருக்கிறது. 30 நாட்களுக்கான வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் விலையை ரூ.203 ஆக வைத்து இருக்கிறது. இப்படி மொத்தமாக 4 புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்களை வோடபோன் ஐடியா நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. இந்த திட்டங்களின் சலுகைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.

மறுபடியும் ரூ.179-க்கு ரீசார்ஜ்.. தீபாவளி ட்ரீட் கொடுத்த Vi சிம்!

வோடபோன் ஐடியா ரூ.179 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 179 Plan Details): 25 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படும். 300 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது.

இந்த விலையிலும் விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை மொபைல் (Mobile) மட்டுமல்லாமல், ஸ்மார்ட் டிவியிலும் (Smart TV) பயன்படுத்தி கொள்ளலாம். ஆரம்ப விலை வாய்ஸ் ஒன்லி திட்டமாக இந்த வோடபோன் ஐடியா ரூ.179 திட்டம் இருக்கிறது. மினிமம் விலையில் சிம் ஆக்டிவ் கொடுக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.203 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 189 Plan Details): முந்தைய திட்டத்தை போல 25 நாட்கள் வேலிடிட்டி வேண்டாம், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், இந்த வோடபோன் ஐடியா ரூ.203 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 30 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தாவை இந்த திட்டம் கொடுக்காது. வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும்.

ஒருவேளை மாதாந்திர வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை எதிர்பார்க்கும் கஸ்டமர்களாக இருந்தால், அவர்களுக்காகவே வோடபோன் ஐடியா ரூ.206 திட்டம் கிடைக்கிறது. இதில் காலண்டர் மாத வேலிடிட்டி (Calendar Month Validity) கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். ஓடிடி சந்தா கிடைக்காது.

வோடபோன் ஐடியா ரூ.206 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 206 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கொடுக்கப்படும். 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். வேறு சலுகைகள் இல்லை. இதில் வேலிடிட்டிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 179 Plan Voice Calls 300 SMS Vi Movies & TV App Check 4 New Voice Only Packs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X