Home
News

அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.179-க்கு இறக்கிய வோடபோன் ஐடியா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிகராக மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்கள் கொடுக்கும் ஆப்ஷன்களைவிட அதிகமான ப்ரீபெய்ட் திட்டங்களை வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. ரூ.179 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இப்படி ரூ.200 விலைக்கும் கீழ் 3 மலிவு விலை திட்டங்களை வைத்திருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ 179 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 179 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.179-க்கு இறக்கிய வோடபோன் ஐடியா.. வாய்ஸ்!

ஆனால், டேட்டா சலுகையை பெரியதாக எதிர்பார்க்க முடியாது. 24 நாட்கள் வேலிடிட்டிக்கும் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல மொத்த வேலிடிட்டிக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 189 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனால், மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இது முந்தைய திட்டத்தை விட 2 நாட்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கூடுதலாக 2 நாட்களுக்கு கிடைக்கும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே மொத்தமாக 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் என்று கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலேயே வழக்கமாக கிடைக்கும்படி 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல டேட்டா சலுகையும் டபுளாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டது. ஆனால், இதில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஏர்டெல்லில் ரூ.200 விலைக்கும் கீழ் திட்டங்களை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஜியோவில் ஓரிரு திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், வோடபோன் ஐடியாவில் பல்வேறு ஆப்ஷன்கள் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

இதைவிட தினசரி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் மட்டுமே 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இருக்கிறது. அதேபோல ஓடிடி சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. ரூ.299 விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ 299 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 299 Plan Details): இந்த திட்டத்துக்கு தினசரிக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். மேலும், விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கொடுக்கப்படும். 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 179 Plan Comes With 24 Days Validity Unlimited Voice Calls Check Plan Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X