வோடபோன் ஒரே போடு.. ரூ.179-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 நாட்கள் வேலிடிட்டி.. 1 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான விலைக்கு வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. வெறும் ரூ.179 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதேபோல ரூ.199-க்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டங்களாக இவை இருக்கின்றன.
கையில் ரூ.200 இருக்கிறது, அதற்கு ஏற்றபடி வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் இருக்கிறதா என்று கேட்டால், பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ரூ.98 விலைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஆனால், அதில் 10 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ரூ.155 விலை திட்டத்தில் 20 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது. இருப்பினும், இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது. ஆகவே, அதையும் கொடுக்கும் திட்டம் அடிமட்ட விலைக்கு வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரூ.179 விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இந்த திட்டம் மூன்று சலுகைகளை கொடுக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 179 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 179 Plan Details): இந்த திட்டத்தில் மட்டுமே அடிமட்ட விலைக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருப்பதால் வேலிடிட்டி முழுவதுக்கும் பொருந்தும்.
இந்த 1 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது. ஆனால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Call) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடிகிறது. இந்த மலிவு விலை திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு அடுத்து 2 திட்டங்கள் இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 189 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், வேலிடிட்டி மட்டும் கூடுதலாக கிடைக்கிறது. அதாவது, 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ்கள் உள்ளன.
ஆனால், வேலிடிட்டி மட்டும் 26 நாட்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும், உங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் திட்டம் வேண்டுமானால், யோசிக்காமல் ரூ.199 விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மாதாந்திர வேலிடிட்டி தொடங்குகிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. ரூ.200-க்கு அதிக ஆப்ஷன்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








