Vodafone Idea மட்ட ரேட்ல ரீசார்ஜ்.. 180 நாட்களுக்கு வாய்ஸ்.. தினமும் 1.5 ஜிபி டேட்டா.. 30ஜிபி கூடுதல் டேட்டா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 6 மாதங்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகளுடன் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் நைட் டேட்டாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Prepaid Plan) கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 1749 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1749 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்களில் இது மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதுபோக கூடுதலாக பல்வேறு டேட்டா சலுகைகள் உள்ளன.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதுபோக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் கிடைக்கும் பின்ஞ் ஆல் நைட் டேட்டா (Binge All Night) கொடுக்கப்படும். இது தினசரி டேட்டாவில் கழிக்கப்படாது.
முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதேபோல தினசரிக்கு ஒதுக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டாவில் மீதமிருக்கும் டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தும்படி வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.
அதாவது, டேட்டா சலுகை முற்றிலும் தீர்ந்த பிறகு அவரச காலத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இப்படி மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும். விஐ ஆப் மூலமாக இதை கிளைம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு டேட்டா சலுகையும் போக 30 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. இது லம்ப்-சம் டேட்டா கிடைப்பதால், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
அதேபோல திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், கூடுதலாக கிடைக்கும் இந்த 30 ஜிபி டேட்டாவை 45 நாட்களில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த டேட்டா காலாவதியாகிவிடும். வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், அதைத் தவிர மீதமுள்ள டேட்டா சலுகைகள் கஸ்டமர்களுக்கு பயனுள்ளதாக உள்ளன.
அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கும் கேப் (Cape) இருப்பதால், இந்த சலுகைகள் கஸ்டமர்களுக்கு தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இப்போது, டேட்டாவை தவிர மீதம் இருக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் மட்டுமே இருக்கிறது. ஓடிடி மற்றும் விஐ கேம்ஸ் போன்ற சலுகைகள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், லாபமான திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








