Home
News

ஒரே Vi ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5GB டேட்டா, நைட் டேட்டா, 5ஜி டேட்டா!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களுக்கு துளியும் குறையில்லாதபடி வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் கொடுக்காத விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா சலுகைகளை வோடபோன் ஐடியா கொடுக்கிறது.

ஜியோ நிறுவனத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடையாது. 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறது. ஆனால், ரூ.2,000 மேல் விலை கொடுக்க வேண்டும். மறுபக்கம் ஏர்டெல்லில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் மட்டுமே அதிக வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருக்கிறது. 6 மாதங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

ஒரே Vi ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா ரூ.1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. ஏனென்றால், 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும்.

180 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 270 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு போதுமான டேட்டாவாக இது இருக்கிறது. இருப்பினும், கூடுதல் டேட்டா சலுகைகளாக அன்லிமிடெட் நைட் டேட்டா (Ulimited Night Data) மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) கொடுக்கப்படுகிறது.

அன்லிமிடெட் நைட் டேட்டாவில் நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் டேட்டா கிடைக்கும். இலவசமாக கிடைப்பதால், நாளொன்றுக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா இதில் கழிக்கப்படாது. ஆனால், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையில் வார நாட்களில் பயன்படுத்தாமல் இருக்கும், டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள மட்டுமே முடியும்.

மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delight) சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 6 மாதங்களுக்கு இந்த திட்டத்தில் வேலிடிட்டி கிடைப்பதால், 6 முறை 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது எமர்ஜென்சி டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.

இந்த டேட்டா சலுகைகள் எல்லாம் 4ஜி கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுவே வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்களாக இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlmited 5G Data) சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இது 4ஜி சேவையை போல அனைத்து சர்க்கிள்களிலும் கொடுக்கப்படவில்லை.

முக்கிய நகரங்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகைகள் போக வேலிடிட்டி நாட்கள் முழுவதும் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. வழக்கமாக கிடைக்கும்படி நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் ரூ.1749 விலைக்கு கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1000 விலைக்குள்ளே 160 மற்றும் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த மலிவு விலைக்கு ஏற்ப டேட்டா வேகம் கஸ்டமர்களுக்கு போதுமானதாக இருக்காது. இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் டேட்டா வேகம் சற்று அதிகமாக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1749 Plan With 180 Days Validity Unlimited Voice Calls Unlimited 5G Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X