வோடபோன் ஐடியாவுக்கு கும்பிடு.. அடுத்த 180 நாட்கள்.. உடனே இதை பண்ணுங்க.. 1.5 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் ரூ. 1749 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை மலிவான விலைக்கு கொடுக்கிறது. குறிப்பாக டேட்டாவில் அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா போன்ற சலுகைகளை கொடுத்துள்ளது.
வோடபோன் ஐடியா ரூ. 1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். அதாவது, 180 நாட்கள் வேலிடிட்டி கொடுத்துள்ளது. இந்த நாட்களில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ஆகவே, 180 நாட்களுக்கு 270 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், அந்த டேட்டாவுக்கு நிகராக அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) கிடைக்கிறது. இந்த டேட்டாவை நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது.
மேலும், தினசரி டேட்டா 1.5 ஜிபிக்கும் இந்த டேட்டாவுக்கும் தொடர்பு கிடையாது. இந்த நைட் டேட்டா போக திங்கள் முதல் வெள்ளி வரையில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தி கொள்ளும் வீக்கெண்ட் டேட்டா கிடைக்கிறது. மேலும், டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. இதில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா கூடுதல் செலவில்லாமல் கிடைக்கும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு மாற்றாக 4ஜி கஸ்டமர்களுக்கு இப்படி ஏகப்பட்ட டேட்டா சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த டேட்டா சலுகைகள் போக 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களின் (Unlimited Local, STD & Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு இந்த திட்டத்தில் கிடைத்துள்ளது.
இதே சலுகைகள் 365 நாட்களுக்கு வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா தொடங்கி நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வரையில் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ. 3499 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், 365 நாட்களுக்கு கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். ஆகவே, 547 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், முந்தைய திட்டத்தை போலவே வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா டேட்டா கிடைக்கும். வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும் இதற்கு கிடைக்கும். அதேபோல 2 ஜிபி டேட்டா டிலைட்ஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா மொத்தமாக கொடுக்கப்படும். ஆனால், இதை 90 நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. மற்ற சலுகைகளை பார்த்தால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் 180 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டிக்கு ஏற்ப கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








