Home
News

Vi ஒரே போடு.. மாதம் ரூ.291-க்கு 180 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. கூடுதலாக 45 நாட்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தில் 180 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் மாதத்துக்கு ரூ.291 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை மட்டுமல்லாமல், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுபோக 45 நாட்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 6 மாதத் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு நிகராக அதிக எண்ணிக்கையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் வோடபோன் ஐடியாவில் கிடைக்கின்றன. இதில் 180 நாட்கள் வேலிட்டி கொடுக்கும் ரூ.1749 திட்டம் கஸ்டமர்களிடையே தனி வரவேற்பு பெற்றுள்ளது. ஏனென்றால், இதற்கான மாத செலவு வெறும் ரூ.291ஆக மட்டுமே இருக்கிறது. இதில் கூடுதலாக வேலிடிட்டி மற்றும் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது.

Vi ஒரே போடு.. மாதம் ரூ.291-க்கு 180 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இதனால், அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், 6 மாதங்களுக்கு பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) இந்த திட்டம் கொடுக்கிறது.

ஆனால், இந்த டேட்டாவானது, 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகளில் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு வழக்கம்போல 4ஜி வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இப்போது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 1749 திட்டம் (Vodafone Idea Rs 1749 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் 180 வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roming Voice Calls) செய்து கொள்ளலாம். நாளொறுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் பயன்படுத்த கிடைக்கும்.

இந்த 1.5 ஜிபி டேட்டா சலுகையானது, 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். இந்த டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 180 நாட்கள் வேலிடிட்டிக்கு 1.5 ஜிபி டேட்டா தினமும் கிடைத்தால், மொத்தமாக 270 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்படுகிறது.

மேலும், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும் பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை மற்றும் மாதத்துக்கு 2 ஜிபி எமர்ஜென்சி டேட்டாவை கொடுக்கும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதை விஐ ஆப் மூலமாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் வழக்கமாக கிடைக்கின்றன.

இதுபோக கூடுதல் டேட்டா சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. அதாவது, மேற்கண்ட டேட்டா சலுகைகள் போல 30 ஜிபி டேட்டா இலவமாக கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த டேட்டாவுக்கு குறிப்பிட்ட காலக்கெடு இருக்கிறது. தினசரி டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, நைட் டேட்டா இல்லாமல், கிடைக்கும் இந்த 30 ஜிபிக்கு 45 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, 45 நாட்களுக்கு பிறகு அந்த 30 ஜிபி டேட்டாவில் மிஞ்சம் இருக்கும் டேட்டா கலாவதியாகிவிடும். ஆனால், திட்டத்துக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா தொடர்ந்து கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கும் இது பொருந்தும். இந்த விலைக்கு ஏற்ப சலுகைகளை கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1749 Plan Offer 180 Days Validity With Unlimited Voice Per Monthly Cost Rs 291
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X