தூக்கி சாப்பிட்ட வோடபோன்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. நைட் FREE டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. குஷியில் யூசர்கள்!
6 மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதுவும் மீடியமான செலவில் பட்டையை கிளப்பும் சலுகைகள் இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு வோடபோன் ஐடியா ரூ.1749 திட்டம் பக்கா தேர்வாக இருக்கிறது. இலவச நைட் டேட்டா முதல் அன்லிமிடெட் கால்கள் வரையில் கஸ்டமர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இதுபோக கூடுதலாக பல்வேறு சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் கூடுதல் டேட்டா சலுகைகள் இந்த திட்டத்துக்கும் பொருந்துகிறது. ஆனால், 6 மாதத்துக்கு வேலிடிட்டி கிடைப்பதால், 6 மணி நேரத்துக்கு மட்டுமே இலவச நைட் டேட்டா கிடைக்கிறது. அதாவது, நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் கிடைத்த இலவச நைட் டேட்டா சலுகை அப்கிரேட் செய்யப்பட்டது. மதியம் 12 மணி வரையில் நீட்டிக்கப்பட்டது.

ஆகவே, 12 மணி நேரங்களுக்கு இலவசமாக டேட்டாவை பெறலாம். ஆனால், இந்த திட்டத்தில் பழையபடி 6 மணி நேரங்களுக்கு மட்டுமே இலவச டேட்டா கிடைக்கும். 6 மணிக்கு மேல் தினசரி டேட்டாவில் இருந்து கழித்து கொள்ளப்படும். இருப்பினும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delights) சலுகைகள் இந்த திட்டத்துக்கு அப்படியே கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.1749 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இதை நாளொன்றுக்கு பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகும் உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த 2 ஜிபி டேட்டாவில் மிஞ்சமாகும் டேட்டாவை வாரம் முழுவதும் சேமித்து வைக்க முடியும்.
இதை வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மூலமாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயன்படுத்த முடியும். மேலும், டேட்டா டிலைட் மூலம் அவசரகால டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும். அதாவது, 180 நாட்களில் 30 நாட்கள் வீதம் 2 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற்று கொள்ளலாம். எந்த டேட்டாவும் இல்லாதபட்சத்தில் இதை பயன்படுத்தலாம்.
இப்படி டேட்டாவில் மட்டும் நான்கு விதமான சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. மற்ற சலுகைகள் வழக்கம்போலவே கிடைக்கின்றன. ஆகவே, வோடபோன் ஐடியா ரூ.1749 திட்டத்தில் 6 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roming Voice Calls) செய்து கொள்ள சலுகை கொடுக்கப்படுகிறது.
100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது, இதை தினமும் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது. இதேபோல 1 வருடத்துக்கு திட்டம் வேண்டுமானாலும் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு ரூ.3,499 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்துக்கும் பொதுவான சலுகைகளே கிடைக்கின்றன.
ஆனால், வேலிடிட்டி மட்டும் 365 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் நைட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தினசரிக்கு பயன்படுத்த 1.5 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வருடம் முழுவதும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் அனுப்பி கொள்ள கிடைக்கிறது.
வாய்ஸ் கால்களிலும் அப்படியே சலுகை இருக்கிறது. லோக்கல், எஸ்டிடி, ரோமிங் என்று அன்லிமிடெட் சலுகையில் வருடம் முழுவதும் வருகிறது. இறுதியாக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும், டேட்டா டிலைட் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 180 நாட்கள் அல்லது 365 நாட்கள் எந்த திட்டம் உங்களுக்கு பக்காவாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








