அறக்க பறக்க ரீசார்ஜ்.. இனிமே ரூ.155 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. அடிமட்ட விலையில் ரீசார்ஜ்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கொடுக்காத அடிமட்ட விலைக்கு வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ப்ரீபெய்ட் திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. இப்போது, ரூ.155 முதல் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொண்ட திட்டங்கள் கிடைக்கின்றன. இப்படி ரூ.200 விலைக்கும் கம்மியாக கிடைக்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த வோடபோன் ஐடியா மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களில் (Vodafone Idea Cheapest Prepaid Mobile Plans) லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, தினசரி டேட்டாவை இதில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த விலைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் கூட திட்டம் கிடையாது. ஆகவே, கிட்டத்தட்ட வாய்ஸ் ஒன்லி திட்டமாக இவற்றை பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.155 திட்ட சலுகைகள் (Vodafone Idea Rs 155 Plan Offers): இந்த மலிவு விலை திட்டத்துக்கு 1 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, இதற்கு மேல் போஸ்ட் டேட்டா கூட கிடைக்காது. எஸ்எம்எஸ் சலுகையும் அப்படியே லம்ப்-சம் முறையில் கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதுக்கும் 300 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.
வாய்ஸ் கால்கள் சலுகைகளில் குறையிருக்காது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 20 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கும். அடுத்த திட்டம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ.179 திட்ட சலுகைகள் (Vodafone Idea Rs 179 Plan Offers): இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்திலும் 1 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த வாய்ஸ் கால்கள் சலுகையும், எஸ்எம்எஸ் சலுகையும் இதில் கிடைக்கும். அதேபோல 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா எதிர்பார்க்க முடியாது. முடிந்தால், டேட்டா வவுச்சர் வேண்டும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கொடுக்கப்படும். இதையடுத்து 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மூன்றாவது மலிவு விலை திட்டம் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.199 திட்ட சலுகைகள் (Vodafone Idea Rs 199 Plan Offers): முந்தைய திட்டங்களைவிட டேட்டா மற்றும் வேலிடிட்டி சலுகைகள் இதில் அதிகமாக கிடைக்கிறது. சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் லம்ப்-சம் டேட்டாவுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டம் இது மட்டுமேயாகும். இதன் சலுகைகளும் நன்றாகவே இருக்கின்றன.
இந்த வோடபோன் ஐடியா மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுவும் லம்ப்-சம் டேட்டா சலுகைதான். ஆகவே, முந்தைய 2 திட்டங்களை போலவே போஸ்ட் டேட்டா கிடைக்காது. அதேபோல எஸ்எம்எஸ்களும் கூடுதலாக கொடுக்கப்படவில்லை. 300 என்னும் லம்ப்-சம் கணக்கிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், முக்கியமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள் சலுகைகள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் சலுகைகளாக 28 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. வோடபோன் ஐடியாவில் ரூ.200 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு நல்ல திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த மூன்றும் தவிர்க்க முடியாத ஆப்ஷன்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








