வோடபோன் தடாலடி.. 2 ரூபாய் போதும், 3 மாதங்களுக்கு ஹாட்ஸ்டார்.. 8 ஜிபி டேட்டா வேற! எந்த பிளான்?
அண்மை காலமாக வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத சலுகைகளை கொண்ட புதுப்புது திட்டங்களை வழங்கிவருகிறது. இப்போது, மலிவு விலை ப்ரீபெய்ட் பிளானில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) சப்கிரிப்ஷனை வழங்குகிறது.
இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா ஆகிய மூன்று டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே, வாடிக்கையாளர் சேவையில் முன்னணியில் இருக்கின்றன. இதில், வோடபோன் ஐடியா நிறுவனம் மற்ற இரண்டு நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல், தவித்தாலும், அசத்தலான பிளான்களை வழங்கி வருகிறது.

ஏனென்றால், சமீபகாலமாக வோடபோன் வாடிக்கையாளர்கள், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். சொல்லப்போனால், வோடபோன் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது. இதனால், அவர்களை தன்பக்கம் இழுக்கவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையார்களை தொடர்ந்து தக்க வைக்கவும், லாபத்தை பார்க்காமல், பல ப்ரீப்பெய்ட் (VI Prepaid Plan), போஸ்ட்பெய்ட் பிளான்களை (VI Postpaid Plan) கொடுத்து வருகிறது.
அந்த வரிசையில், ரூ 151 ப்ரீபெய்ட் பிளானில் (Vodafone Rs 151 Prepaid Plan) 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்கிரிப்ஷனை வழங்குகிறது. இந்த ஹாட்ஸ்டார் பிளானின் மதிப்பே ரூ.149ஆக இருக்கும் நிலையில், 2 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தினாலே சப்கிரிப்ஷனை வழங்குகிறது. இந்த நேரத்தில் ரூ 151 பிளானின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வோடபோன் ஐடியா ரூ 151 பிளான் விவரம் (Vodafone Rs 151 Plan): இதுவொரு போனஸ், டேட்டா வவுச்சர் ப்ரீபெய்ட் பிளானாகும். இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 8 ஜிபி டேட்டா உடன் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்கிரிப்ஷன் கிடைக்கும். ஆனால், கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைககள் கிடைக்காது.
இருப்பினும், ஹாட்ஸ்டாரின் 70 நாட்கள், 84 நாட்கள், 356 நாட்கள் சப்கிரிப்ஷனை அந்த பிளானின் விலையோடு கூடுதலாக 2 ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம். இதோடு உங்களுக்கு டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும். வோடபோன் சிம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஹாட்ஸ்டார் சப்கிரிப்ஷன் பெற வேண்டும் என்றால், இந்த பிளானை தாராளமாக பயன்படுத்தலாம்.
ஏனென்றால், இதோடு கூடுதலாக உங்களுக்கு டேட்டாவை கொடுக்கும். 2 ரூபாய்க்கு 8 ஜிபி டேட்டா கிடைத்தால், அது லாபமான திட்டமென்றே சொல்ல வேண்டும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications