பொசுக்குனு இப்படியா? வெறும் ரூ.151 போதும்.. 8GB டேட்டா.. 90 நாட்கள் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன்!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படியான ஓடிடி சலுகையை வெறும் ரூ 151 விலையில் டேட்டாவோடு வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி, டேட்டா சலுகை உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.
வோடபோன் ஐடியா ரூ 151 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 151 Plan Details): ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட மிகவும் மலிவான விலையில் டேட்டா சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கொண்ட திட்டமாக இந்த வோடபோன் ஐடியா ரூ 151 திட்டம் இருக்கிறது.

இந்த திட்டம் முழுக்க முழுக்க டேட்டா மற்றும் ஓடிடி சலுகையை மட்டுமே கொண்ட திட்டமாகும். இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 8 ஜிபி லம்ப்சம் டேட்டா வழங்கப்படும். அதோடு 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney Plus Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.
இந்த சப்ஸ்கிரிப்ஷனில் 720p தரத்தில் வீடியோக்களை பார்த்துக்கொள்ள முடியும். இந்த திட்டம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காண விரும்பும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்காக கொடுக்கப்படுகிறது. இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பெற உங்களிடம் பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Prepaid Plan) இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தை சிம் ஆக்டிவ் திட்டத்தோடு மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வளவு மலிவான விலையில், டேட்டாவோடு ஓடிடி சலுகை கிடைப்பது நல்ல லாபத்தை தரக் கூடியதாகவே தோன்றுகிறது. ஒருவேளை உங்களுக்கு ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனோடு அன்லிமிடெட் வாய்ஸ்கள் மற்றும் தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், ரூ 499 விலையில் கிடைக்கும் மற்றொரு திட்டத்தை தேர்வு செய்யலாம்.
வோடபோன் ஐடியா ரூ 499 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 499 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதோடு தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையோடு ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுக்கிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 84 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 3 மாதத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும், வோடபோன் ஐடியாவில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை வழங்கப்படுகிறது. வார நாட்களில் பயன்படுத்தமால், மீதம் விடப்பட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேபோல பின்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மூலம், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான டேட்டா உங்களின் திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது, முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்திஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல், விஐ மூவிஸ் & டிவி விஐபி (Vi Movies & TV VIP) சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படும். இதன் மூலம், லைவ் டிவி சேனல்கள், பிரீமியம் மூவிக்களை பார்த்துக்கொள்ள முடியும். இவ்வளவு சலுகைகள் போக 2 ஜிபி பேக்கப் டேட்டா சலுகை மற்றும் 5 ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








