Home
News

இனிமே ரூ.151 போதும்.. 3 மாசத்துக்கு JioHotstar சந்தா.. 4 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள் வேணும்னா ரூ.469 போதும்!

ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஹாட்ஸ்டார் (Hotstar) ஓடிடி ஆப்கள் இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவாக கிடைக்க இருக்கிறது. இதனால், கேம் ஆப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்ற சீரிஸ்கள் ஒரே ஆப் மூலம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, டெலிகாம் கஸ்டமர்கள் எந்தெந்த திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது? எவ்வளவு விலைக்கு கிடைக்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து வருகின்றனர். இதில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுக்கிறது.

வோடபோன் ஐடிய ரூ 151 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 151 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளை மட்டுமே கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படும். 4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு 30 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்கிறது.

இனிமே ரூ.151 போதும்.. 3 மாசத்துக்கு JioHotstar சந்தா.. 4 ஜிபி டேட்டா!

வோடபோன் ஐடிய ரூ 169 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 169 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமும் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கும். ஆகவே, மூன்று மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும், 8 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. வாய்ஸ் கால்கள் வேண்டுமானால் பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

வோடபோன் ஐடிய ரூ 469 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 469 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு அடுத்து 84 நாட்கள் திட்டம் இருக்கிறது.

வோடபோன் ஐடிய ரூ 994 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 994 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் மூன்று மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆனால், 84 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது.

வோடபோன் ஐடிய ரூ 3699 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 3699 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.

இந்த டேட்டா சலுகை போக முந்தைய திட்டத்தில் பார்த்த பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வருடம் முழுவதும் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களும் வருடாந்திர வேலிடிட்டியில் பயன்படுத்த கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 151 Plan With 3 Months JioHotstar Subscription 4GB Data Check JioHotstar Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X