Home
News

ஒரே போடு.. இனி மாசத்துக்கு ரூ.162 போதும்.. 270 நாட்கள் வேலிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 100 எஸ்எம்எஸ்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்களை அடுத்து வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கும் திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.162 செலவில் 9 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் (Voice Only Plan) முழு விவரங்கள் இதோ.

தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) விதிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டிராய் அதை மறுத்தது.

ஒரே போடு.. இனி மாசத்துக்கு ரூ.162 போதும்.. 270 நாட்கள் வேலிட்டி!

டெலிகாம் விதிகளின்படி கட்டண உயர்வில் தலையிட முடியாது. அதே நேரத்தில் மலிவான விலையில் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய டேட்டா இல்லாமல் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டும் அடங்கிய திட்டங்களை கொடுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தது. இதன்படி ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமாகின்றன.

ஏற்கனவே, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்போது, மூன்றாவது நிறுவனமான வோடபோன் ஐடியாவானது, ரூ 1460 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தில் வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது.

அதே நேரத்தில் வேலிடிட்டியும் அதிகமாக இருக்கிறது. டேட்டா துளியும் இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, 9 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) மட்டும் அடங்கிய திட்டம் வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 1460 வாய்ஸ் திட்டம் (Vodafone Idea Rs 1460 Voice Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 270 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லில் 365 நாட்களுக்கு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இதில் 85 நாட்கள் கம்மியாக வேலிடிட்டி இருக்கிறது. இருப்பினும், அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் இருக்கிறது.

இந்த வோடபோன் ஐடியா வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு (Vodafone Idea Voice Only Plan) மாதம் வெறும் ரூ.162 மட்டுமே செலவாகிறது. இந்த விலையிலேயே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) பெற்று கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்களை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கிறது.

ஆகவே, 270 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். ஆகவே, இந்த திட்டம் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு நல்ல லாபத்தை தரக் கூடியதாகவே இருக்கிறது. இந்த ஒரேவொரு திட்டம் மட்டுமே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கிய சலுகையின் கீழ் கிடைக்கிறது.

அதே நேரத்தில், 28 நாட்கள் அல்லது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இல்லாதது கஸ்டமர்களிடையே சிரமத்தை ஏற்பட்டுத்தலாம். இருப்பினும், வோடபோன் ஐடியா விரைவில் அதுபோன்ற வேலிடிட்டி கொண்ட திட்டங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஜியோ, ஏர்டெல்லில் பல திட்டங்கள் வந்துவிட்டன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1460 Plan With Unlimited Voice Calls 270 Days Validity Check New Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X