அறக்க பறக்கும் வோடபோன்.. மாதாந்திரம் ரூ.241 போதும்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ மிரளும் விதமாக வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்துவரும், மாதத்துக்கு வெறும் ரூ.241 செலவில் கிடைக்கும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பற்றியும், ரூ.299 விலை கொண்ட மாதாந்திர திட்டத்தை பற்றியும் இங்கே தெரிந்துகொள்ள போகிறோம்.
வோடபோன் ஐடியா ரூ 299 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, மொத்தமாக 42 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பின் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளை பயன்படுத்தலாம்.
இந்த டேட்டா ரோலோவர் மூலம் வார நாட்களில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பயன்படுத்தலாம். பின்ஞ் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இறுதியாக டேட்டா டிலைட்ஸ் சலுகை மூலம், திட்டத்தின் சலுகைகள் போக ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி டேட்டா ப்ரீயாக பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா டிலைட்ஸ் சலுகையை பெற 121249 என்ற எண்ணுக்கு கால் செய்யலாம் அல்லது விஐ ஆப் மூலம் பெறலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இதே சலுகைகள் கம்மி விலையில் வேண்டுமானால், 6 மாத வேலிடிட்டி திட்டத்தை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால், மேற்கூறிய திட்டத்தின் மாதாந்திர செலவானது, ரூ.299ஆக இருக்கிறது. ஆனால், அதுவே 6 மாத வேலிடிட்டி சலுகை கொண்ட ரூ 1449 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அதற்கான மாதாந்திர செலவானது, ரூ.241ஆக குறைகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 270 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்திலும், 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் (64 Kbps) வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகளும் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், முந்தைய திட்டத்தில் கொடுக்கப்பட்ட வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், பின்ஞ் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். 5 ஜிபி டேட்டா ப்ரீயாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications