Home
News

இதுக்கு மேல முடியாது.. மாதம் ரூ.241 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. 300 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

மாதத்துக்கு ரூ.241 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை 180 நாட்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், கூடவே 30 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம். ஆறு மாதங்களுக்கு பக்காவான டேட்டா சலுகைகள் உடன் மலிவான ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், இதை தாராளமாக வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு பிறகு 5ஜி சேவைகளை கொடுக்க தொடங்கிவிட்டன. சொல்லப்போனால், அன்லிமிடெட் 5ஜி சேவைகளை இலவசமாக கொடுத்து வருகின்றன. ஆனால், போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியாவானது, இன்றளவும் 5ஜி சேவைகளை வழங்கவில்லை. இதனால், போனஸ் டேட்டா சலுகையை கையில் எடுத்துள்ளது.

இதுக்கு மேல முடியாது.. மாதம் ரூ.241 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, அதிக வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் தினசரி டேட்டா சலுகை மட்டுமல்லாமல், போனஸ் டேட்டாவையும் (Bonus Data) கொடுத்து வருகிறது. அப்படி, 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மட்டுமல்லாமல், 30 ஜிபி போனஸ் டேட்டாவையும் கொடுத்துள்ளது.

வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இதுவொரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெறலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 270 ஜிபி டேட்டாவை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதுபோக 30 ஜிபி போனஸ் டேட்டா வருவதால், 300 ஜிபிக்கான சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், 1.5 ஜிபிக்கு பிறகும் கஸ்டமர்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை மாதந்தோறும் இலவசமாக பெறலாம்.

அதேபோல பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night) சலுகை மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பிஞ்ச் ஆல் நைட் டேட்டா மூலம் பெற்று கொள்ளலாம்.

அதேபோல வார நாட்களில் பயன்படுத்தாமல் மீதம் இருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம். இவ்வளவு டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது.

இந்த திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு எந்தவித டேட்டா குறையும் இன்றி இருக்கலாம். இந்த போனஸ் டேட்டாவை பெற வேண்டுமானால், விஐ ஆப் மூலம் கிளைம் செய்து கொள்ள முடியும். மாதத்துக்கு ரூ.241 செலவில் இந்த திட்டம் கிடைப்பதால், நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1449 Plan With 180 Days Validity, Voice Calls, 30GB Extra Data Check 6 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X