Home
News

பொசுக்குனு வழங்கிய வோடபோன்.. மாதம் ரூ.233 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ மிரளும்படி மாதாந்திரம் வெறும் ரூ.233 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் கால்கள், 1.5 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ரூ 50 டிஸ்கவுண்ட் சலுகை உடனான ப்ரீபெய்ட் திட்டத்தை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி சலுகைகளை தவிர மற்ற அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா சலுகைகளும் கிடைக்கிறது.

பொசுக்குனு வழங்கிய வோடபோன்.. மாதம் ரூ.233 போதும்.. 6 மாதம் வேலிடிட்டி!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 180 நாட்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, மொத்தமாக 270 ஜிபி டேட்டாவானது கஸ்மடர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையும் வருகிறது.

இதுபோக 30 ஜிபி டேட்டாவை கூடுதலாக பெற்று கொள்ளலாம். ஆகவே, 300 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்த முடியும். இதுபோக பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night) சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைக்கு கட்டணம் கிடையாது.

அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்கிறது. ஆகவே, வார நாட்களில் மீதம் இருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் முழுவதும் பயன்படுத்த முடியும். இதுமட்டுமல்லாமல், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் 2 ஜிபி டேட்டா மாதந்தோறும் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுக்கு எந்தவித குறையும் கிடையாது. இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) வோடபோன் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் 100 தினசரி எஸ்எம்எஸ்களும் கிடைக்கிறது.

இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் போதாதென்று ரூ 50 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த வோடபோன் ஐடியா ரூ 1449 திட்டத்தை விஐ ஆப் (vi App) மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு ரூ 50 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ 1399 விலையில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ 233 மட்டுமே தேவைப்படுகிறது.

ஒருவேளை வோடபோன் ஐடியாவில் கூடுதல் டேட்டா சலுகையோடு வருடம் முழுவதும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வேண்டுமானால், ரூ 2899 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இப்போது, இந்த திட்டத்தில் சலுகைகளை பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2899 Plan Details): இந்த ப்ரீபெய்ட திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலவே தினசரி 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் சலுகைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வருவதால், மொத்தமாக 547.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுபோக 50 ஜிபி கூடுதல் டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு பொருந்தும். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ 241 மட்டுமே செலவாகிறது. ஆகவே, இந்த 2 திட்டங்களுக்கும் 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களில் நல்ல சலுகைகள் மற்றும் கூடுதல் டேட்டா சலுகையை கொண்டிருக்கிறது. இதுபோன்ற டெலிகாம் செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1449 Plan Offers Rs 50 Flat Discount With 180 Days Validity Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X