Vodafone சிம் இருக்கா.. இனிமே ரீசார்ஜ் ஒன்னு.. 4 பேருக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா.. தூக்கி சாப்பிட்டுருச்சு!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படி ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் 4 சிம் கார்டுகளுக்கு (4 SIM Card) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டேட்டா (Data) சலுகையை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் கொடுத்துள்ளது. இதுபோக ஓடிடி சந்தா, ஆன்லைன் ஃபுல் டெலிவரி, நைட் டேட்டா, விஐ கேம்ஸ் போன்ற நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வோடபோன் ஐடியா திட்டத்தின் விவரங்கள் இதோ.
ஜியோ நிறுவனத்துக்கு ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கஸ்டமர்கள் அதிகரிப்பு குடைச்சலாக இருக்கிறது. இப்போது, வோடபோன் ஐடியாவும் லாபம் பார்க்காமல், ஃபேமிலி சிம் கார்டு திட்டத்துடன் மேலும் போட்டியாக மாறி இருக்கிறது. இது போஸ்ட்பெய்ட் திட்டமாக இருந்தாலும், சலுகைகளை பார்த்தால் மூக்கில் விரல் வைத்து விடுவீர்கள்.

வோடபோன் ஐடியா ரூ 1201 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1201 Plan Details): இந்த திட்டத்தில் பிரைமரி சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் கால்கள் கிடைக்கும். லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் (National Roaming) கால்களை செய்து கொள்ளலாம். வேலிடிட்டி முழுவதுக்கும் 120 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.
இந்த டேட்டாவுக்கு பிறகு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையை பிரைமரி சிம் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 200 ஜிபி டேட்டாவுக்கான ரோலோவர் சலுகை கிடைக்கிறது. மேலும், விஐ கேம்ஸ் (Vi Games) சலுகையை வோடபோன் ஐடியா பிரைமரி கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இப்போது, ஓடிடி சந்தா மற்றும் இதர சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த சலுகைகள் ஆப்ஷன் முறையில் கிடைக்கிறது. அதாவது, ஓடிடி மற்றும் இதர சலுகைகள் உள்பட மொத்தம் 9 ஆப்ஷன் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இதில் ஏதாவது 2 சலுகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த 2 சலுகைகளை திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.
என்னென்ன ஆப்ஷன் இருக்கின்றன? ஓடிடி ஆப்களை பொறுத்தவரையில், மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா இருக்கிறது. 6 மாதங்களுக்கு சந்தா கொடுக்கும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா இருக்கிறது. அதேபோல 1 வருட சந்தா கொடுக்கும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா இருக்கிறது.
மேலும், 360 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் சோனிலிவ் (SonyLIV) சந்தா இருக்கிறது. அதேபோல 1 வருடத்துக்கான சந்தாவை கொடுக்கும் சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தாவும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்று அல்லது 2 ஓடிடி ஆப்களை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், ஒன்றை தேர்ந்தெடுத்து இதர சலுகைகளில் ஏதாவது ஒரு சலுகையை பெற்று கொள்ளலாம்.
ஓடிடிக்கு அடுத்தப்படியாக ஒரு வருடத்துக்கு ஸ்விக்கி ஒன் (Swiggy One) அணுகல் கொடுக்கும் 2 கூப்பன்கள் இருக்கிறது. அதேபோல 1 வருடத்துக்கான அணுகல் கொடுக்கும் ஈஸிடின்னர் (EazyDiner) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இதையும் 2 கூப்பன்களாக பயன்படுத்தி கொள்ளலாம். டிராவல் செய்யும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கும் ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) சலுகை கிடைக்கிறது.
இதற்கும் 1 வருடத்துக்கான அணுகல் கிடைக்கும். மாதத்துக்கு ஒரு முறை டிராவல் செய்து ரூ.750 மதிப்பில் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இறுதியாக 1 வருடத்துக்கு நோர்டன் மொபைல் (Norton Mobile) பாதுகாப்பு சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 40 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








