ஏங்க... வோடாபோனாங்க இது.. ஒரே திட்டத்துல அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்.. 12 மாதங்களுக்கு 2 ஓடிடி சந்தா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ரெட்எக்ஸ் திட்டங்களில் (REDX Plans) கஸ்டமர்களே நம்ப முடியாத சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. இந்த ரெட்எக்ஸ் திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ.1201 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1201 Plan Details): இந்த ரெட்எக்ஸ் திட்டத்துக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD), நேஷனல் ரோமிங் (National Roaming) உள்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. மாதத்துக்கு 3000 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.

விஐ கேம்ஸ் (Vi Games) சலுகை கிடைக்கும். இன்டர்நேஷனல் ரோமிங் (International Roaming) மற்றும் ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் (Airport Lounge Access) கிடைக்கிறது. இதுபோக நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 6 மாத சந்தாவுடன் அமேசான் பிரைம் (Amazon Prime) கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் டிவி & மொபைல் (JioHotstar TV & Mobile) கிடைக்கிறது.
இந்த சந்தாவை ஒரு வருடத்துக்கு பயன்படுத்தலாம். மேலும், 365 நாட்களுக்கு சோனிலிவ் பிரீமியம் (Sony LIV Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா பல மாதங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக ஸ்விக்கி ஒன் (Swiggy One) மெம்பர்ஷிப் ஒரு வருடத்துக்கு கிடைக்கிறது. நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) கிடைக்கிறது.
இதையும் ஒரு வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் அனைத்தும் ஒரேவொரு கஸ்டமருக்கு மட்டுமே கிடைக்கும். பேமிலி சிம் கார்டுகளின் கனெக்சன் இதில் கிடைக்காது. ஒருவேளை இதேபோல சலுகைகளுடன் பேமிலி சிம் கார்டு கனெக்டிவிட்டி வேண்டுமானால், மற்றொரு ரெட்எக்ஸ் திட்டம் இருக்கிறது. இதன் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.
வோடபோன் ஐடியா ரூ.1601 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1601 Plan Details): இந்த ரெட்எக்ஸ் திட்டத்தில் கூடுதலாக 2 சிம் கார்டுகளுக்கு கனெக்சன் கிடைக்கும். இந்த கூடுதல் சிம் கார்டுகளுக்கு லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் கால்கள் கிடைக்கும். 40 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படும். பிரைமரி சிம் கார்டுக்கு முந்தைய திட்டத்தை போலவே ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன.
ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மாதத்துக்கு 3000 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மல்டிபிளேயர் சப்போர்ட்டுடன் விஐ கேம்ஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் இன்டர்நேஷனல் ரோமிங் மற்றும் ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் கொடுக்கப்படுகிறது.
அதேபோல நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா கொடுக்கப்படும். 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும். 1 வருடத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி சந்தா கொடுக்கப்படும். சோனிலிவ் பிரீமியம் (Sony LIV Premium) சந்தா கிடைக்கிறது. மேலும், 1 வருடத்துக்கான அணுகலுடன் ஸ்விக்கி ஒன் கிடைக்கிறது. நார்டன் மொபைல் செக்யூரிட்டி 1 வருடத்துக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த ரெட்எக்ஸ் திட்டம் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே, விலை மற்றும் சர்வீஸ் அதை போலவே இருக்கும். ஒரே திட்டத்தில் அதிக ஓடிடி, டேட்டா மற்றும் விமான பயணங்கள் செய்யும் கஸ்டமர்களுக்கு லவுஞ்ச் போன்ற சலுகைகள் வேண்டுமானால், இந்த ரெட்எக்ஸ் திட்டங்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். அதேபோல பேமிலி சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








