போடு ரீசார்ஜ்.. 70 நாட்களுக்கு இனிமே இதுதான்.. வாய்ஸ் கால்கள்.. 12 மணி நேர FREE டேட்டா.. நெட்பிளிக்ஸ் சந்தா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தா (Netflix Subscription) மட்டுமல்லாமல், 12 மணி நேர இலவச டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற சலுகைகள் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) கிடைக்கிறது. அதில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வோடபோன் ஐடியா திட்டமானது, கஸ்டமர்களை தட்டித் தூக்கும்படி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் கிடைக்கும் இந்த திட்டங்களில் ஓடிடிக்கு கிடைக்கும் டேட்டாவில் எந்த பஞ்சமும் இருக்காது. ஏனென்றால், ஹாப் டே அன்லிமிடெட் டேட்டா (Half Day Unlimited Data) சலுகை இந்த திட்டங்களில் கிடைக்கின்றன. இந்த சலுகை மூலம் இரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கும் தினசரி டேட்டாவுக்கும் தொடர்பில்லை.

வோடபோன் ஐடியா ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1198 Prepaid Plan): இந்த திட்டத்தில் 70 நாட்களுக்கான நெட்பிளிக்ஸ் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல வேலிடிட்டியும் 70 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் இரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delights) சலுகைகளையும் இந்த வோடபோன் ஐடியா ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஆகவே, நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு ஏற்ப டேட்டா சலுகை அதிகமாகவே கிடைக்கிறது. இப்போது, மற்ற சலுகைகளை பார்க்கலாம்.
ஓடிடி மற்றும் டேட்டாவுக்கு அடுத்தபடியாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roming Voice Calls) சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகைகள் வேண்டுமானால், அடுத்து வரும் ப்ரீபெய்ட் திட்டம் பக்கா தேர்வாகும்.
வோடபோன் ஐடியா ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1198 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதிகப்படியான டேட்டா சலுகையை கொடுக்கிறது. கூடுதலாக வேலிடிட்டி கிடைப்பதால், டேட்டாவும் அதிகமாகவே பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், முன்பு பார்த்ததை போலவே இரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படும்.
ஆனால், இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா 2.5 ஜிபியாக கிடைக்கிறது. அதேபோல வேலிடிட்டி 84 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, தினசரிக்கு பயன்படுத்தும் டேட்டாவில் மொத்தமாக 210 ஜிபி டேட்டா வருகிறது. இதற்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகைகள் கிடைக்கிறது. மாதந்தோறும் 2 ஜிபி பேக்கப் டேட்டாவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ.1599 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கான நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற்று கொள்ளலாம். மொபைல் மற்றும் டிவி டிவைஸ்களில் இந்த சந்தாவை பயன்படுத்தலாம். மற்ற சலுகைகளை பார்க்கையில், முன்பு பார்த்த திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. அதாவது, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி அல்லது ரோமிங் வாய்ஸ் கால்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது.
100 எஸ்எம்எஸ் சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் சந்தாவை டேட்டாவுக்கு பஞ்சமில்லாமல் பெற வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பட்ஜெட் மற்றும் வேலிடிட்டிக்கு ஏற்ப ஆப்ஷனில் எடுக்கலாம். போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.1201 மதிப்பிலான திட்டத்தில் நெர்ட்பிளிக்ஸ் சந்தா கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








