70 நாட்களுக்கு ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 12 மணி நேர இலவச டேட்டா.. நெட்பிளிக்ஸ் சந்தா.. விஐ யூசர்கள் குஷி!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் (Netflix Subscription) 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், 12 மணி நேரத்துக்கு இலவச டேட்டா சலுகையையும் கொடுக்கின்றன. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வருகின்றன. இந்த வோடபோன் ஐடியா நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 1198 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மட்டுமல்லாமல், நாள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கொடுக்கப்படுகிறது.

ஆகவே, பாதி நாள் முழுவதும் இலவச டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கும் தினசரிக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவுக்கும் தொடர்பு இல்லை. முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்ற பிரத்யேக சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.
ஒட்டுமொத்தமாக டேட்டாவில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இப்போது, ஓடிடி சலுகைக்கு வருவோம். இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா (Netflix Basic Subscription) கொடுக்கப்படுகிறது. இதை டிவி மற்றும் மொபைலில் பயன்படுத்தி கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு வருகிறது.
முக்கியமாக 70 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதைவிட கூடுதல் வேலிடிட்டி மற்றும் ஓடிடி சந்தா வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ 1599 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 1599 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1599 Plan Details): இந்த நெட்பிளிக்ஸ் சந்தா கொண்ட திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, அதே 84 நாட்கள் முழுவதும் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவை பெற்று கொள்ளலாம். இது டிவி மற்றும் மொபைல் டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் கொடுக்கும். இப்போது மற்ற சலுகைகளை பார்க்கலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகை மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை வருகிறது. அதேபோல டேட்டா டிலைட்ஸ் சலுகையும் கிடைக்கிறது.
மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதில் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். இதில் பெஸ்ட் திட்டத்தை நீங்களே தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications