Home
News

Vi சிம் இருக்கா.. 1 நாளுக்கு 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 84 நாட்களுக்கு வேலிடிட்டி!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்திருக்கும கஸ்டமர்களுக்கு பயன்படுத்த பயன்படுத்த குறையாத டேட்டா சலுகைகள் இப்போது நாம் பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கின்றன. தினசரி டேட்டா, 12 மணி நேர இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டா, பேக்கப் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

வோடபோன் ஐடியா ரூ 1197 திட்டம் (Vodafone Idea Rs 1197 Plan): நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் பயன்படுத்த முடியும். 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுப்பதால், மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக கூடுதலாக ஏகப்பட்ட டேட்டா சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

Vi சிம் இருக்கா.. 1 நாளுக்கு 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதாவது, இந்த தினசரி டேட்டா சலுகை போக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டெய்லி கோட்டா சலுகை கிடைக்கும். 12 மணி நேரங்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். ஆகவே, நள்ளிரவு 12 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் இலவசமாக டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது தினசரி டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது.

அதாவது, தினசரிக்கு ஒதுக்கப்பட்ட 3 ஜிபி டேட்டாவை மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு இந்த அன்லிமிடெட் நைட் டேட்டா சலுகை தொடங்கப்பட்டுவிடும். இந்த டேட்டாவுக்கு அடுத்ததாக வழக்கமாக விஐ கஸ்டமர்களுக்கு கிடைக்கும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், 2 ஜிபி பேக்கப் டேட்டா (Backup Data) கிடைக்கிறது. அதாவது, இதில் கிடைக்கும் ஒட்டுமொத்த டேட்டாவும் தீர்ந்த போன பிறகு மீண்டும் சலுகை ஆரம்பிக்கும் வரையில் பயன்படுத்தி கொள்ளும்படி இந்த 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதை விஐ செயலி வழியாக மட்டுமே பெற்று கொள்ளலாம்.

மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை கிளைம் செய்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த டேட்டா சலுகைகளும் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த திட்டம் கொண்டுள்ளது. இந்த சலுகைகளுக்களுக்காவே விஐ சூப்பர் ஹீரோ திட்டம் (Vi Super Hero Plan) என்று கூறப்படுகிறது. இப்போது, அடுத்த சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இதற்கு அடுத்து வாய்ஸ், எஸ்எம்எஸ் உள்ளன.

இதைத் தவிர வேறு சலுகைகள் கிடைக்காது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் (Unlimited Local Voice), எஸ்டிடி வாய்ஸ் (STD Voice) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கிடைக்கிறது. இதேபோல சலுகைகளுடன் கூடுதலாக ஓடிடி சந்தா வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 979 திட்டம் (Vodafone Idea Rs 979 Plan): இது முந்தைய திட்டத்தைவிட விலை கம்மியாக இருக்கிறது. ஏனென்றால், இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும்பட்சத்தில் அது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் கோட்டா டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். முந்தைய திட்டத்தில் பார்த்த 12 மணி நேரத்துக்கு இலவச டேட்டா, வீக்கெண்ட் டேட்டோ ரோலோவர் மற்றும் 2 ஜிபி பேக்கப் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

இந்த சலுகைகள் போக கூடுதலாக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) சந்தா கிடைக்கிறது. இதை மொபைல் மற்றும் டிவியில் பயன்படுத்தி கொள்ளலாம். 19 ஓடிடி ஆப்களை இதில் ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும். சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன்கோட் (FanCode) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1197 Plan With 3GB Data Unlimited Voice 84 Days Validity Check Vi Super Hero Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X