இறங்கி அடிச்ச வோடபோன்.. மாதம் ரூ.99 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 50 ஜிபி டேட்டா.. வாய்ஸ் காலுக்கு ரூ.154!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் கிடைக்கும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை (Yearly Prepaid Plan) இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். ஒரு திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.99 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. மற்றொரு திட்டம் மாதத்துக்கு ரூ.154 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் எந்த திட்டம் டேட்டா சலுகையையும், எந்த திட்டம் வாய்ஸ் கால் சலுகையையும் கொடுக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 1189 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1189 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, வருடம் முழுவதும் டேட்டா சலுகையை தவிர மற்ற சலுகைகள் கிடைக்காது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 50 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படும். வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்துக்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்காது. ஆகவே, உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும். லம்ப்-சம் டேட்டா சலுகை அதிகமாக தேவைப்படும், கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். இந்த திட்டத்துக்கு மாத செலவை கணக்கிட்டால், ரூ.99 ஆக மட்டுமே இருக்கிறது. வாய்ஸ் கால்கள் திட்டம் எப்படி?
ஒருவேளை இதேபோல வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறதா? என்றால், புதிய திட்டம் ஒன்று இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி அடிமட்ட விலையில் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கும் திட்டமாக இது அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 1849 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1849 Plan Details): முந்தைய திட்டம் டேட்டா சலுகையை மட்டுமே மாதத்துக்கு ரூ.99 செலவில் கொடுத்தது. ஆனால், இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது மாதத்துக்கு ரூ.154 செலவில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
இது லம்ப்-சம் சலுகையாக கிடைப்பதால், உங்களுக்கு தேவைப்படும்போது அனுப்பி கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படி இல்லை. 365 நாட்கள் வேலிடிட்டி என்றால், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை கொடுக்கிறது.
இதைத் தவிர மற்ற சலுகைகள் இந்த திட்டத்துக்கு கிடையாது. அதிகப்படியான டேட்டா சலுகைகள் இதே விலையில் வேண்டுமானால், மூன்றாவதாக மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் வீக்கெண்ட் டேட்டா ரோலாவர், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா போன்ற சலுகைகளும் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த திட்டமானது, முந்தைய திட்டங்களைவிட வேலிடிட்டி குறைவாக கொடுக்கிறது. ஆகவே, 180 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த நாட்களில் அதிகப்படியான டேட்டா சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆகவே, இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வருகிறது.
இதுபோக டேட்டா டிலைட்ஸ் சலுகை மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. அதே போல பிஞ்ச் ஆல் நைட் டேட்டா மூலம் அன்லிமிடெட் நைட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications