Home
News

இனி எதுக்கு பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.174-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 12 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் 4ஜி திட்டங்களுக்கு அடுத்து 5ஜி திட்டங்களுக்கு சென்றுவிட்டன. ஆனால், போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா 4ஜி திட்டங்களிலேயே இருக்கிறது. ஆகவே, இனிமேல் மூன்றாவது இடத்துக்கான போட்டி என்பது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடனேயே இருக்க போகிறது. இதனால் திட்டங்களும் அடிமட்ட விலையில் கிடைக்கின்றன. இப்போது பார்க்க போகும் திட்டமும் அப்படித்தான். மாதத்துக்கு வெறும் ரூ.174 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பிஎஸ்என்எல் நிறுவனம் அடிமட்ட விலைக்கு திட்டங்களை கொடுத்தாலும், 4ஜி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், சில பகுதிகளில் மட்டுமே 4ஜி சேவைகள் கிடைக்கின்றன. முக்கால்வாசி கஸ்டமர்களுக்கு 4ஜி சேவை சென்று சேரவில்லை. இருப்பினும், 4ஜி சேவைக்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதால், ஏற்கனவே அந்த இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா விட்டுக்கொடுக்காது.

இனி எதுக்கு பிஎஸ்என்எல்.. மாதம் ரூ.174-க்கு 180 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல்லுக்கு நிகராக திட்டங்களை கொடுக்கிறது. அதே நேரத்தில் 4ஜி வேகத்தில் டேட்டா வேகமும் கிடைப்பதால், பட்டையை கிளப்புகிறது. இப்படி அடிமட்ட விலைக்கு ரூ 1049 திட்டத்தை கொடுக்கிறது. இந்த திட்டமானது, மாதத்துக்கு வெறும் ரூ.174 செலவில் கிடைக்கிறது. ஆனால், 6 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளை கொடுத்திருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 1049 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1049 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை (Vodafone Idea Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த 6 மாதங்களில் வாய்ஸ் கால்களுக்கு கொஞ்சம்கூட பஞ்சமிருக்காது. ஏனென்றால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது.

இதுபோக ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் கிடைப்பதால், 6 மாதங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ் வந்துவிடும். இது மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அடிமட்ட விலையிலேயே கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப டேட்டா சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 12 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கும்.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது. ஆகவே, டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள லம்ப்-சம்மாக கொடுக்கப்படுகிறது. அதாவது, 1800 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கொடுக்கப்படும். இதை லிமிட் இல்லாமல் தேவைக்கு ஏற்ப கஸ்டமர்களால் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆகவே, 180 நாட்களுக்கு மலிவான விலையில் வாய்ஸ் கால்களுக்கு குறையில்லாத திட்டம் வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டம் வருடம் முழுவதும் வேண்டுமானால், ரூ 1999 விலைக்கு கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை தாராளமாக ரீசார்ஜ் செய்யலாம்.

வோடபோன் ஐடியா ரூ 1999 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1999 Plan Details): இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். அதேபோல 3600 எஸ்எம்எஸ் சலுகையை மொத்தமாக பெற்று கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில், 24 ஜிபி மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திலும் போஸ்ட் டேட்டா கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1049 Plan With Unlimited Voice Calls 180 Days Validity 12GB Data Best 6 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X