Home
News

தூக்கி சாப்பிட்ட வோடபோன்.. மாசம் ரூ.174 போதும்.. 180 வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 12 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும்படி மாதத்துக்கு வெறும் ரூ.174 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. ஆகவே, ஆறு மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதேபோல 365 நாட்கள் வேலிடிட்டி திட்டமும் இருக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1049ஆக இருக்கிறது. ஆகவே, உங்களுக்கு மாதம் செலவாகும் தொகையை கணக்கிட்டு பார்த்தால், வெறும் ரூ.174 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த கம்மி செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை 180 நாட்கள் முழுவதும் பெற்று கொள்ளலாம். மேலும், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது.

தூக்கி சாப்பிட்ட வோடபோன்.. மாசம் ரூ.174 போதும்.. 180 வேலிடிட்டி வருது!

வோடபோன் ஐடியா ரூ 1049 திட்டம் (Vodafone Idea Rs 1049 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்கள் அதாவது 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 6 மாதங்கள் முழுவதும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதுபோக டேட்டா சலுகை மற்றும் எஸ்எம்எஸ் சலுகை இருக்கிறது. வோடபோன் ஐடியாவில் வாய்ஸ் கால்கள் மட்டுமே கொண்ட திட்டங்கள் கிடைத்தாலும், இந்த திட்டத்தில் டேட்டாவை பெற முடிகிறது. ஆகவே, 12 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது 6 மாதங்களுக்கும் மொத்தமாக கொடுக்கப்படும் டேட்டாவாகும்.

ஆகவே, இந்த வேலிடிட்டிக்கு முன்பே டேட்டாவை முடித்துவிட்டால், கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவுக்கு கஸ்டமர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போலத்தான் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. அதாவது, மொத்தமாக 1800 எஸ்எம்எஸ்கள் 6 மாதங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதையும் முன்கூட்டியே முடித்தால் கட்டணம் இருக்கும்.

இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. இதேபோல வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் வோடபோன் ஐடியாவிடம் இருக்கிறது. இது ரூ.1999 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏர்டெல், ஜியோவிடம் திட்டங்கள் இருந்தன. ஆனால், வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு பிறகு நீக்கப்பட்டன.

வோடபோன் ஐடியா ரூ 1999 திட்டம் (Vodafone Idea Rs 1999 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளில் மாற்றம் இருக்கும். ஆனால், வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஆகவே, முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை இந்த திட்டத்திலும் செய்து கொள்ளலாம்.

ஆனால், 365 நாட்களுக்கும் இது பொருந்தும். டேட்டாவை பார்க்கையில், முந்தைய திட்டத்தில் 12 ஜிபி கிடைத்தது. இந்த திட்டத்தில் 24 ஜிபி டேட்டாவாக கிடைக்கிறது. இருப்பினும், 24 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கூடுதல் டேட்டாவுக்கு கட்டணம் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கு அடுத்து 3600 எஸ்எம்எஸ்களை இந்த வருடாந்திர திட்டம் கொடுக்கிறது.

ஆகவே, இந்த திட்டங்கள் வாய்ஸ் கால்களுக்கு துளியும் குறையில்லாமலும், டேட்டாவை விலைக்கு ஏற்ப கம்மியாகவும் கொடுக்கின்றன. அதேபோல எஸ்எம்எஸ் சலுகையையும் பேக் செய்துள்ளன. உங்களுக்கு அடிமட்ட விலைக்கு 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் வேண்டுமானால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1049 Plan With 180 Days Validity Voice Calls 12GB Data Cheapest Six Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X