Home
News

BSNL-க்கு கும்பிடு.. மாதம் ரூ.174-க்கு 180 நாட்களை இறக்கிய வோடபோன்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்.. 12 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bhari Airtel) நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு கூட்டம் கூட்டமாக கஸ்டமர்கள் மாறினாலும், 4ஜி டேட்டாவை இப்போதைக்கு அதில் பயன்படுத்த முடியாது என்பதே உண்மை. இருப்பினும், அடிமட்ட விலைக்கு திட்டங்கள் இருப்பதால், கஸ்டமர்களை தட்டிதூக்கி வருகிறது. ஆனால், அடிமட்ட ரேட்டில் 4ஜி டேட்டாவுடன் திட்டத்தை கொடுத்து வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அசத்தியிருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) விவரங்கள் இதோ.

வோடபோன் ஐடியா நிறுவனம் மலிவான விலைக்கு அதிகப்படியான சலுகைகளை கொடுக்க தொடங்கிவிட்டது. ஏனென்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துவிட்டால், வோடபோன் ஐடியா காணாமல் போகும். இதனாலேயே கம்மி விலையில் திட்டங்களை கொடுக்க முடிவெடுத்துள்ளது. 4ஜி வேகம் இருப்பதால், இப்போது ஒரு திட்டத்தில் தட்டித்தூக்கிவிட்டது.

BSNL-க்கு கும்பிடு.. மாதம் ரூ.174-க்கு 180 நாட்களை கொடுக்கும் வோடபோன்!

வோடபோன் ஐடியா ரூ 1049 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1049 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் டேட்டா (Data) என்று முக்கிய சலுகைகள் அனைத்தும் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகைகளுக்கான வேலிடிட்டி 6 மாதங்களுக்கு கிடைப்பதுதான் இந்தி திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைப்பதால், டேட்டாவில் மட்டும் கட்டுப்பாடுகள் இருக்கின்றது. இருப்பினும், டேட்டா வவுச்சர்கள் மூலம் 4ஜி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் சலுகையில் எந்தவித குறையும் கிடையாது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடிகிறது. எஸ்எம்எஸ் சலுகையை பார்க்கையில், டேட்டாவை போலவே மொத்தமாக கொடுக்கப்படுகிறது. அதாவது, 1800 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

சொல்லப்போனால், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 180 நாட்களுக்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், தினசரி லிமிட் கிடையாது. இந்த ப்ரீபெய்ட திட்டத்துக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்று பார்த்தால், ரூ.174 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது. தினசரி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால் பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ 1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data) சலுகை கிடைக்கிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வோடபோனின் பிரத்யேக டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல 180 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளையும் கொண்டிருக்கிறது. வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் 180 நாட்கள் வேலிடிட்டிக்கு சென்றால், இந்த 2 திட்டங்களை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1049 Plan With 180 Days Validity 12GB Free Data Check Cheapest 6 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X