Home
News

ஒரே Vi ரீசார்ஜ்.. 180 நாட்கள் ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 12 ஜிபி டேட்டா.. ரூ.1029-க்கு முடிச்சாச்சு!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டத்தை இங்கே கொடுத்துள்ளோம். ஒரு திட்டம் ரூ.1029 விலைக்கும் மற்றொரு திட்டம் ரூ.1,749 விலைக்கும் கிடைக்கிறது. இதில் எந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முழு விவரங்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்த விஐ (Vi) திட்டங்கள் ஒரே மாதிரியான வேலிடிட்டி கொடுத்தாலும், டேட்டா சலுகையானது ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு திட்டத்தில் லம்ப்-சம் டேட்டாவும், மற்றொரு திட்டத்தில் தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கிறது. அடிமட்ட விலைக்கு சிம் ஆக்டிவ் வேண்டுமானால், பின்வரும் திட்டம் பக்கான தேர்வாக இருக்கும்.

ஒரே Vi ரீசார்ஜ்.. 180 நாட்கள் ஜமாய்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1049 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது டேட்டாவை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு சரியாக இருக்காது. கம்மி விலையில் அதிக வேலிடிட்டி எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். அதாவது, 180 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், அந்த நாட்களுக்கு 12 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது. ஆகவே, டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டும் போதும் என்று நீங்கள் இருந்தால், இதைவிட மலிவான விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி திட்டம் கிடைக்காது. 6 மாதங்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம். மேலும், எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது. ஆனால், இதுவும் லம்ப்-சம் சலுகையாகவே கிடைக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு கிடைக்காமல், மொத்தமாக 1800 எஸ்எம்எஸ்களாக கொடுக்கப்படுகிறது. இதை தீர்த்துவிட்டால் கட்டணம் இருக்கும்.

இதே 180 நாட்கள் வேலிடிட்டியில் தினசரி டேட்டாவுடன் திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு நிச்சயம் மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், இதே விலையில் கிடைக்காது. ரூ.700 விலை அதிகமாகவே அந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இருப்பினும், அதற்கு ஏற்ப சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதை பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 1749 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1749 Prepaid Plan): இந்த திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கிடையாது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 180 நாட்களுக்கும் பயன்படுத்தலாம். இந்த தினசரி டேட்டா மட்டுமல்ல, பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) சலுகையின் கீழ் நாள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கிடைக்கிறது.

இதேபோல வோடபோன் ஐடியாவில் பிரத்யேகமாக கிடைக்கும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delight) சலுகைகளும் கிடைக்கிறது. மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் வருகிறது. இந்த டேட்டாவை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. வாய்ஸ் கால்கள் ஒரே மாதிரியாக அன்லிமிட்டாக கிடைக்கிறது.

ஆகவே, சிம் ஆக்டிவ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், முதலில் பார்த்த வோடபோன் ஐடியா ரூ.1029 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். அதுவே தினசரி டேட்டா வேண்டுமானால், அடுத்தாக இருக்கும் ரூ.1,749 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதைவிட பெஸ்ட் திட்டம் இருந்தால், கமெண்ட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1049 Plan Rs 1749 Plan With 180 Days Validity Unlimited Voice Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X