அறக்க பறக்குது ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.174 போதும்.. 6 மாசத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. லம்ப்-சம் டேட்டா!
மாதத்துக்கு ரூ.174 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி வருகிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகள் மற்றும் வேலிடிட்டி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த வோடபோன் ஐடியா திட்டமானது, ரூ.1049 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை அதிகமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு சலுகைகளை பயன்படுத்த முடிகிறது. இதில் மாதத்துக்கான செலவை பார்த்தால், வெறும் ரூ.174ஆக மட்டுமே இருக்கிறது. இது லாபம் தரக்கூடிய விலையாகவே தெரிகிறது.

ஏனென்றால், ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், வோடபோன் ஐடியாவில் ரூ.174 விலைக்கு திட்டம் கிடையாது. அதுவே 6 மாதத்துக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு அந்த மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.
வோடபோன் ஐடியா ரூ 1049 ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 1049 Recharge Plan): இந்த 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டமானது, வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் சலுகைகளை விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. ஏனென்றால், 6 மாதங்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் கால்கள் கிடைக்கிறது.
இதேபோல அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் கால்களையும் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளே பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால், இதில் கூடுதலாக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், டேட்டாவானது, லம்ப்-சம் (Lump-sum) சலுகையில் தேவைக்கு ஏற்ப மட்டுமே கொடுக்கப்படுகிறது.
அதாவது, இந்த திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், அந்த மொத்த நாட்களுக்கும் 12 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, ஒரு மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா என்னும் கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த டேட்டாவை பயன்படுத்த லிமிட் கிடையாது. தேவைப்படும் நேரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே நேரத்தில் 12 ஜிபி டேட்டாவானது, வேலிடிட்டிக்கு முன்பாகவே செலவிடப்பட்டால் அதற்கு பிறகு மற்ற திட்டங்களில் கிடைப்பதை போலவே போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படாது. ஆகவே, 12 ஜிபிக்கு பிறகு பயன்படுத்தும் 1 எம்பி டேட்டாவுக்கு கஸ்டமர்களிடம் 50 பைசா வசூலிக்கப்படும். இதனாலேயே இது வாய்ஸ் கால்களுக்கான திட்டமாக இருக்கிறது.
இந்த சலுகைகள் மட்டும்தான் கிடைக்கிறதா என்றால், அப்படியில்லை, 1800 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதையும் தேவைப்படும் நேரத்தில் அனுப்பி கொள்ளலாம். இந்த எஸ்எம்எஸ் சலுகைகளையும் வேலிடிட்டிக்கு முன்னதாவே பயன்படுத்தி முடித்துவிட்டால், அதற்கு பிறகு ஒரு எஸ்எம்எஸ்-க்கு 1 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆகவே, வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு 180 நாட்களுக்கு கம்மி செலவில் வாய்ஸ் கால்களுடன் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டத்தை தாராளமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டம் ஏற்கனவே ப்ரீபெய்ட் கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதேபோல பல்வேறு திட்டங்களை வோடபோன் ஐடியா கொடுக்கிறது. இதில் 5ஜி சலுகை கிடையாது.


Click it and Unblock the Notifications