Vodafone Idea: ரூ. 100-க்கும் கம்மி விலையில் புதிய Vi Wi-Fi கால்லிங் திட்டம் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
வோடபோன் ஐடியா இன்று முதல் இந்தியாவில் தனது வைஃபை அழைப்பு சேவையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் Vi என்ற பிராண்டிங் பெயரை மாற்றம் செய்த நேரத்திலிருந்து புது-புது திட்டங்களையும் யுக்திகளையும் கையில் எடுத்து தனது பயனர்களுக்கு அதன் சேவையை புது ரூபத்தில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது Vi நிறுவனம் வைஃபை கால்லிங் சேவையை அறிமுகம் செய்கிறது.

Vi நிறுவனம்
இந்த வைஃபை அழைப்பு சேவையை Vi நிறுவனம் சில காலமாகவே சோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ .59 மற்றும் ரூ .65 ப்ரீபெய்ட் திட்டங்களையும் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிட்டர் வழியாக நிறுவனம் தனது Vi Wi-Fi கால்லிங் சேவை அறிமுகமானதைத் தனது பயனர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

Vi Wi-Fi கால்லிங் சேவை
டெலிகாம் அறிக்கையின்படி, Vi Wi-Fi கால்லிங் சேவையை நிறுவனம் முதல் வட்டமாக மகாராஷ்டிரா, கோவா மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று வட்டங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற வட்டங்களுக்கு வெகு விரைவில் இந்த Vi Wi-Fi கால்லிங் சேவை கிடைக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.

Vi வைஃபை அழைப்பு சேவையை இந்தியாவில்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை கடந்த ஆண்டு தங்கள் வைஃபை அழைப்பு சேவையை அறிமுகப்படுத்தின, அதனைத் தொடர்ந்து தற்பொழுது வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வைஃபை அழைப்பு சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வைஃபை அழைப்பு முக்கியமாகப் பயனர்களை டேட்டாவைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள மற்றும் பெற அனுமதிக்கிறது.

ரூ .100 விலையின் கீழ் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா, ரூ .100 விலையின் கீழ் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .59 மற்றும் ரூ .65 விலையுள்ள திட்டங்கள் அழைப்பு மற்றும் தரவு சலுகைகளை வழங்குகின்றது. Vi ரூ. 59 ப்ரீபெய்ட் திட்டம், 30 நிமிட குரல் அழைப்பு மற்றும் 100MB டேட்டா நன்மையை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. Vi ரூ 65 காம்போ பேக், 100MB டேட்டாவுடன் ரூ. 52 மதிப்புள்ள டாக் டைம் நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications