Home
News

ஜன.31ஆம் தேதி கெடு.. மாதம் ரூ.241 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜியோ அறிவித்த சலுகைகளுக்கு நிகராக வோடபோன் ஐடியா நிறுவனமும் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரையில், ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மிரட்டலான சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் அதிகப்படியான சலுகைகள் கொண்ட மூன்று திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 270 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.

மாதம் ரூ.241 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த 1.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு கூடுதலாக 30 ஜிபி டேட்டா மற்றும் ரூ 50 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, வெறும் ரூ 1399 செலுத்தி இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகையை பெற விஐ ஆப்பில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

வோடபோன் ஐடியா ரூ 2899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 2899 Plan Details): இந்த ப்ரீபெய்ட திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வருடாந்திர திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 547.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 1.5ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்யலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக குடியரசு தினத்தை முன்னிட்டு, 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதுபோன்ற சலுகைகளோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சலுகையும் வேண்டுமானால், ரூ 3099 திட்டத்தை கஸ்டமர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவானது கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பின்ஞ் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இப்போது, குடியரசு தினத்தை முன்னிட்டு, ரூ 75 தள்ளுபடி மற்றும் 50 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரூ 3,024 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Republic Day 2024 Offers With Rs 1449 Plan Comes 180 Days Validity Unlimited Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X