Home
News

புதிய செயலியை அறிமுகம் செய்யும் வோடபோன் ஐடியா: எதற்கு தெரியுமா?

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை வழங்கி வருகிறது.

புதிய செயலியை அறிமுகம் செய்யும் வோடபோன் ஐடியா: எதற்கு தெரியுமா?

தற்சமயம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சொந்தமாக மியூசிக் ஸ்டிரீமிங் செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா மற்றும் வோடபோன்

ஐடியா மற்றும் வோடபோன்

வின்க் மற்றும் சாவன் செயலிகளை ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சொந்தமாக வழங்கி வருகிறது, இந்நிலையில் ஐடியா மற்றும் வோடபோன் புதிதாக செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் அறிமுகம் செய்த சிறந்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும்
வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea to reportedly launch its music streaming app soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X