ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!

|

வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் வாய்ஸ் அழைப்புகளுக்கு இனி கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.

து ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா

து ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா

புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை மாற்றத்தைத் தொடர்ந்து ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய ப்ரீபெய்ட் விலை மாற்றங்கள் நேற்று முதல் ஜியோவில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன்பே புதிய விலை மாற்றத்தை ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் அமல்படுத்திவிட்டது.

ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்

ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்

ஆனால் இன்று காலை முதல் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அனைத்து நெட்வொர்க் அழைப்பிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அதிரடியாக அறிவித்தது. இனி தனது பயனர்கள் எந்தவித கவலையும் இன்றி, வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மூன்று ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகம் செய்தது.

ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!ஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா

ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா

ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போல் வோடபோன்-ஐடியா நிறுவனமும் தற்பொழுது தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை இலவசமாக்கியுள்ளது. இதன்படி இன்று முதல் வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு எந்தவித கட்டணமும் வாய்ஸ் கால்களுக்காக வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வோடபோன்-ஐடியா நிறுவனம் இந்த திடீர் மாற்றத்தை தற்பொழுது அமல்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் FUP வரம்பு முடித்தவுடன் நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கும் திட்டத்தையே தற்பொழுது அமலில் வைத்துள்ளது.

வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?வாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

என்ன செய்யப்போகிறது ஜியோ?

என்ன செய்யப்போகிறது ஜியோ?

வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அதிரடி மாற்றத்திற்குப் பின் ஜியோ நிறுவனமும் இலவச அழைப்பு சேவையை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Removing Voice Calling Limit on New Recharge Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X