பிரபலமான திட்டங்களில் டபுள் டேட்டா நன்மையை நிறுத்தியது வோடபோன் ஐடியா.!
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் டபுள் டேட்டா நன்மையை நிறுத்தியது. அதன்படி ரூ.399 மற்றும் ரூ.599 திட்டங்களில் டபுள் டேட்டா (இரட்டை தரவு)நன்மைகளை வழங்கிவந்தது, தற்சமயம் இந்த திட்டங்களில் தான் டபுள் டேட்டா நன்மை நிறுத்தப்பட்டது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களில் 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.முன்பு இந்த திட்டங்களில் டபுள் டேட்டா நன்மைகளுடன் 3ஜிபி டேட்டா நன்மைகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வோடபோனின் ரூ.299, ரூ.449, ரூ.699 ப்ரீபெய்ட் திட்டங்களில் தொடர்ந்து டபுள் டேட்டா (இரட்டை தரவு)நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு
மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு
வழங்கப்படுகிறது.

வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வோடபோனின் ரூ.669-பிரீபெய்ட் திட்டத்தல் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட்வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

அன்மையில் வோடபோன் நிறுவனம் அதன் பிரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ரென்டல் விலையை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் RED தொடரின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான போஸ்ட்பெய்ட் திட்டமான Vodafone RedX தற்போது ரூ.1,099-க்கு அணுக கிடைக்கிறது. இதற்கு முன்பு இந்த திட்டத்தின் விலை ரூ.999-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டம் தோராயாமாக 10சதவீத விலை உயர்வை, அதாவது ரூ.100என்கிற விலை உயர்வைப் பெற்றுள்ளது.

இந்த வோடபோன் ரெட்எக்ஸ் திட்டம் தான் நிறுவனத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட்
போர்ட்ஃபோலியாவில் மிகவும் விலை உயர்ந்த திட்டம் ஆகும. நன்மைகளை பொறுத்தவரை வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தேசிய ரோமிங், மாதத்திற்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

இதுதவிர ஒரு வருட நெட்ஃபிக்ஸ் சலுகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஒய்வகங்களுக்கான அணுகல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சிறப்பு விலையின் கீழ் ஐ.எஸ்.டி அழைப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளுக்கும் கிடைக்கும்.

ஆனால் வோடபோனின் ரெட்எக்ஸ் திட்டத்தின் அதிகரித்த விலையானது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது ஏற்னவே சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு பொருந்துமா என்பதில் குழப்பம் நீட்டிக்கிறது.


Click it and Unblock the Notifications








