TRAI சார்.. குட் பாய்-ஆ நானே மாத்திட்டேன்! உடனே ரூ.1460 நீக்கம்.. 2 புதிய Vodafone வாய்ஸ்-SMS பிளான் அறிமுகம்!
டிராய் (TRAI) கட்டளைக்கு இணங்கி, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 நிறுவனங்களுமே ஆளுக்கு 2 வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்தன. ஆனால் அவைகள் எதிர்பார்த்த அளவிற்கு மலைவானதாக இலலாத காரணத்தினால் அறிமுகமான வேகத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே தத்தம் திட்டங்களை விலைகளை கடுமையாக (ரூ.201 வரை) குறைத்தன.
டிராய்-ன் உத்தரவிற்கு இணங்கி வோடாபோன் ஐடியா நிறுவனமும் ரூ.1460 வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானை அறிமுகம் செய்திருந்தது. தற்போது ஜியோவும், ஏர்டெல்லும் தத்தம் வாய்ஸ்-எஸ்எம்எஸ் பிளான்களின் விலைகளை குறைத்ததை தொடர்ந்து வோடபோன் ஐடியாவானது அதன் ரூ.1460 திட்டத்தை நீக்கிவிட்டு, இன்னும் மலிவான விலைக்கு 2 புதிய வாய்ஸ்-எஸ்எம்எஸ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வவுச்சர்களின் விலை ரூ.470 மற்றும் ரூ.1849 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்ற விலையில் தான் ஏர்டெல் நிறுவனமும் அதன் பயனர்களுக்காக வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூம் ஏர்டெல்லின் கட்டணங்களை நகலெடுக்கும் வோடாபோனின் உத்தி இன்னு மாறவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது
வோடாபோன் ஐடியா ரூ.470 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (Vodafone Idea Rs 470 Voice and SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
வோடாபோன் ஐடியா ரூ.1849 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (Vodafone Idea Rs 1849 Voice and SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
தாங்கள் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் எந்தவொரு டேட்டா நன்மையையும் தேவைப்படாத வாடிக்கையாளர்கள், தத்தம் சிம் கார்டுகளை குறைந்த செலவில் நீண்ட நாட்களுக்கு ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள உதவும் எஸ்டிவி (STV - ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்) திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டிராய் (TRAI) உத்தரவிட்டு இருந்தது
இந்த உத்தரவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட, வேறு வழி இல்லாமல் இந்தியாவில் உள்ள 3 தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை அறிமுகம்செய்துளளன. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல்நிறுவனத்திடம் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் உள்ளது.
விலை குறைக்கப்பட்டு, ரூ.469 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல்லின் என்ட்ரி லெவல் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.
மறுகையில் உள்ள ஏர்டெல்லின் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.448 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதேபோல ஜியோவின் ரூ.1748 திட்டத்தின் கீழ் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முன்னதாக இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கியது. பின்னர் ரூ.210 விலைகுறைப்போடு சேர்த்து வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








