Home
News

Jio, Airtel-ஐ பார்த்து நேரடியா விலை ஏத்துனது தப்புதான்! பழையபடி ரூ.250 க்கு இறங்கிய Vodafone.. 40 நாள் பிளான்!

ஏர்டெல் மற்றும் ஜியோவை தெடர்ந்து, கடந்த 2204 ஜூலை மாதத்தில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் திடீர் விலை உயர்வை அறிவித்து இருந்தது. அநியாய விலை உயர்வாக பார்க்கப்பட்ட இது - 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்ட ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கே மோசமான பின்விளைவுகளை (பெரிய எண்ணிக்கையிலான கஸ்டமர் இழப்புகளை) ஏற்படுத்தி வருகிறது.

நிலைமை இப்படி இருக்கையில், 4ஜி சேவைகளை வைத்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கிடையில் "நேரடியாக" விலைகளை ஏற்றியது தவறுதான். இதை "மறைமுகமாக" செய்து இருக்க வேண்டும் என்பது போல வோடாபோன் ஐடியாவானது, அதன் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது.

விலை ஏத்துனது தப்புதான்.. பழையபடி ரூ.250 க்கு இறங்கிய Vodafone!

டெலிகாம்டால்க்கின் (Telecomtalk) சமீபத்திய அறிக்கையின்படி, மீண்டும் கொண்டுவரப்பட்டதோடு சேர்த்து ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியும் (Vodafone Rs.289 Prepaid Plan Validity) குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கட்டணத்தை உயர்த்தி, நேரடியாக விலை உயர்வை கொண்டு வருவதற்கு பதிலாக, வேலிடிட்டியை குறைத்து, மறைமுகமாக திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது.

ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் வேலிடிட்டி குறைக்கப்பட்ட பின்பும் கூட ரூ.289 ஆனது 40 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (40 Days Validity) வழங்குகிறது. முன்னதாக இது 48 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருந்தது. அதாவது இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 8 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் விலை மறைமுகமாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.02 இல் இருந்து ரூ.7.225 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இது மொத்தம் ரூ.40 க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பாத, அதே சமயம் நீண்ட (1 மாதத்திற்கும் மேலான) வேலிடிட்டியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, ரூ.289 ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்!

இதேபோலத்தான் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்ஜின் விலையும் (Vodafone Rs.489 Prepaid Plan) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் வோடபோன் ஐடியாவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டமானது 56 நாட்களுக்கு பதிலாக 48 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை மட்டுமே வழங்கும். மெங்கும் ரூ.479 திட்டத்தின் டெய்லி டேட்டா லிமிட்டும் 1ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை வழங்கியது.

வோடபோன் ஐடியாவின் ரூ.289 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது 40 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 4ஜிபி அளவிலான மொத்த டேட்டா, 600 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 4ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் டேட்டா பிளான்களை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

இந்தியாவின் 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே (Jio, Airtel, Vi), நுகர்வோரிடமிருந்து அதிக கட்டணங்களை வசூலிக்க விரும்புகின்றன. அதன் மூலம் ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்க்கப்படும் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (Average revenue per user) அதிகரிக்க விரும்புகின்றன; இதன் மூலம் 3 இந்த டெலிகாம் நிறுவனங்களாலும் அதிக வருவாயை ஈட்ட முடியும்.

இதெல்லாம் அநியாயமாக இல்லையா என்று கஸ்டமர்கள் கதறினாலும், டெலிகாம் நிறுவனங்கள் கண்டுகொள்வதாய் இல்லை, ஏனென்றால் இந்திய அரசாங்கமானது ரீசார்ஜ் விலை உயர்வு தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது. ஆகையால் வோடபோன் ஐடியாவை போலவே ஜியோவும் (Jio), ஏர்டெல்லும் (Airtel) கூட தத்தம் திட்டங்களின் நன்மைகளை அல்லது வேலிடிட்டியை குறைத்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Reduced Validity of Rs 289 Plan Followed By Rs 489 Indirect Tariff Hike Continues
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X