5ஜி சோதனையில் பட்டைய கிளப்பும் வோடபோன் ஐடியா நிறுவனம்.! வேகம்?

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை செய்து வருகிறது. குறிப்பாக 5ஜி சோதனையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதிவேக இணைய சேவையை பதிவு செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் நொடிக்கு 3.7ஜிபி வேகத்தை பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சோதனை பூனே நகரில் நடைபெற்றது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 3.5 ஜிகாஹெர்ட்ஸ்

மேலும் காந்திநகர் பகுதியில் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் இணைய வேகம் நொடிக்கு 1.5 ஜிபியாக பதிவானது என்று கூறப்படுகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை மத்திய அரசின் 5ஜி ஸ்பெக்ட்ரத்தில் சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த சோதனை பூனே மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ளை அறிமுகம்

அதேபோல் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாச தள்ளுபடியுடன் டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன், அமேசான் கிரேட் இந்தியன் விற்பனைஅட்டகாச தள்ளுபடியுடன் டாப் 10 கேமரா ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன், அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை

5ஜி தொழில்நுட்பத்தினால்

குறிப்பாக இந்த 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் பயனர்களே உஷார்: டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம்? சட்டவிரோத செயல்களில் சிக்கும் பயனர்கள்..டெலிகிராம் பயனர்களே உஷார்: டார்க் வெப் தளமாக மாறுகிறதா டெலிகிராம்? சட்டவிரோத செயல்களில் சிக்கும் பயனர்கள்..

 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில்

அதாவது 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டுமற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க- தள்ளுபடி எல்லாம் வேற லெவல்: விரைவில் வரும் அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் சலுகை!கொஞ்சம் வெயிட் பண்ணுங்க- தள்ளுபடி எல்லாம் வேற லெவல்: விரைவில் வரும் அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் சலுகை!

 5ஜி சேவை என்று கூறப்படும் போது

அதேபோல் 5ஜி சேவை என்று கூறப்படும் போது முதலில் நாம் நினைப்பது வேகம் தான், அதன்படி Gigabits-per-second (Gbps)வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதாவது 1ஜி சேவையானது வெறும் கால் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அடுத்து 2ஜி சேவையான டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. அதன்பின்பு3ஜி சேவையில் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ் என அனைத்தும் பயன்படுத்த முடிந்தது. மேலும் 4ஜி சேவையானது சிறந்த இன்டர்நெட் வேகத்தை கொடுத்தது, இதன் மூலம் வீடியோ கால் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மிகவும் அருமையாக பயன்படுத்த முடிந்தது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

 5ஜி சேவையானது 4ஜி விட 100 மட

இனிவரும் 5ஜி சேவையானது 4ஜி விட 100 மடங்கு வேகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவை ஆனது Mbps வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனவே விரைவில் வரும் 5ஜி சேவையானது வேகமாக இணையத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 4ஜி வேகத்தில் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய 7 அல்லது 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த 5ஜி சேவையில் மிகவிரைவில் அதாவது சில வினாடிகளில்
டவுன்லோடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது 5ஜி சேவை. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சோதனையில் இப்போது நொடிக்கு 3.7 ஜிபி வேகத்தை பதிவு செய்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea recorded a speed of 3.7 GB per second on the 5G test: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X