சத்தமில்லாமல் திட்டங்களின் விலையை உயர்த்திய வோடபோன் ஐடியா.!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவந்த weekend rollover data சலுகை ஆனது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது

போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதுவும் மகாராஷ்டிரா & கோவா, கொல்கத்தா, சென்னை, தமிழ்நாடு போன்ற வட்டங்களில் மட்டுமே போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.

 ரூ.598 மற்றும் ரூ.699

ரூ.598 மற்றும் ரூ.699

அதன்படி இப்போது ரூ.598 மற்றும் ரூ.699-க்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை தான் வோடபோன் ஐடியா நிறுவனம் உயர்த்தியுள்ளது. முன்பு ரூ.598 மற்றும் ரூ.699-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இப்போது ரூ.649 மற்றும் ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.598 போஸ்ட்பெய்ட் திட்டம் விலை உயர்ந்து ரூ.649-க்கு ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. அதேபோல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் விலை உயர்ந்து ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

கொல்கத்தா, சென்னை

தற்சமயம் மகாராஷ்டிரா& கோவா, கொல்கத்தா, சென்னை, தமிழ்நாடு போன்ற வட்டங்களில் கிடைக்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ.649, ரூ.799, ரூ.999, ரூ.948 மற்றும் ரூ.1,348 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மற்ற வட்டங்களில் இன்னும் ரூ

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள வட்டங்களை தவிர மற்ற வட்டங்களில் இன்னும் ரூ.598, ரூ.749, ரூ.899 மற்றும் ரூ.999 க்கு பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் செய்ய கிடைக்கின்றன.

கூறவேண்டும்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மகாராஷ்டிரா & கோவா, கொல்கத்தா, சென்னை, தமிழ்நாடு போன்ற வட்டங்களில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ.649 க்கு தொடங்குகிறது. ஆனால் மீதமுள்ள 17 வட்டங்களில் ரூ.598-க்கு தொடங்குகிறது.

ரூ.649 போஸ்ட்பெய்ட திட்டம்

ரூ.649 போஸ்ட்பெய்ட திட்டம்

நமது ஊரில் இப்போது கிடைக்கும் வோடபோன் ஐடியா ரூ.649 போஸ்ட்பெய்ட திட்டமானது இரண்டு இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 80ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் முதன்மை இணைப்பு 50ஜிபி டேட்டா நன்மையும் இரண்டாம் நிலை இணைப்பு ஆனது 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

அதேபோல் முதன்மை இணைப்பு வைத்திக்கும் பயனர் 200ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்து கொள்ளலாம். பின்பு இரண்டாம் நிலை இணைப்பு பயனர் 50ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்யலாம். இந்த இரண்டு இணைப்புகளுக்கும் வழங்கப்படும் பிற நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகள் அடங்கும்.

வோடபோன் ஐடியா ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.799 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று இணைப்புகள் கிடைக்கும். குறிப்பாக முதன்மை இரண்டு இரண்டாம் நிலை இணைப்புகள் இதில் உள்ளன. பின்பு இந்த திட்டம் வழங்கும் மொத்தம் டேட்டா

நன்மை 120ஜிபி ஆகும். குறிப்பாக முதன்மை இணைப்பிற்கு 60ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் அடுத்து இரண்டமர் நிலை இணைப்புகளுக்கு தலா 30ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea raises prices for two postpaid plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X