வருடம் முழுதும் தடையில்லாமல் பேசணுமா? அப்போ இது தான் சரியான திட்டம்.. முக்கியமா 'இதை' கவனிக்கணும்..

|

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல ப்ரீபெய்ட் திட்டங்களை ஆண்டுக் கால செல்லுபடியுடன் வழங்குகிறது. வருடாந்திர திட்டம் என்றாலே, அது அதிக விலை கொண்டதாகத் தான் இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்கிறோம், அவ்வளவு பெரிய தொகையை நாம் செலவு செய்ய வேண்டுமா என்ற தயக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், மாதம் தொடர்ந்து நீங்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை விட இந்த திட்டங்கள் உங்களுக்குப் பணத்தை மிச்சம் பிடிக்கிறது. இது பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் 12 மாத நன்மை கிடைக்கும் பயன்கள்

பட்ஜெட் விலையில் 12 மாத நன்மை கிடைக்கும் பயன்கள்

பெரும்பாலும் பயனர்கள் ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்யும் போது, அது மிகவும் பாக்கெட் நட்புத் திட்டமாக இருக்கிறதா? அல்லது பட்ஜெட் விலையில் இருக்கிறதா என்று தேடுகிறோம். உண்மையைச் சொல்லப் போனால், 12 மாதம் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தொகையை விட, வருடாந்திர திட்டம் உங்களுக்குக் குறைவான செலவில் அதன் நன்மையை வழங்குகிறது. இப்படி பயனர்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் Vi இடமும் உள்ளது. தினமும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ரூ. 2,000க்கு மேல் செலவாகும். ஆனால், வோடபோன் ஐடியா உங்களுக்குக் குறைவான விலையில் ஒரு திட்டத்தை வைத்துள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 1,499 விலையில் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ. 1,499 விலையில் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம்

அதன் தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டத்துடன் பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் விலையை மிகவும் பாக்கெட்டுக்கு ஏற்ற விலையில் Vi இப்போது வழங்குகிறது. வோடபோன் ஐடியா ரூ. 1,499 விலையில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், அது மிகவும் கவர்ச்சிகரமான டேட்டா பலன்களை வழங்காததே இதற்குக் காரணமாக இருக்கும். இருப்பினும், வருடம் முழுதும் நீங்கள் தடையில்லாமல் பேசுவதற்கான வாய்ஸ் கால் நன்மையை இது வழங்குகிறது.

இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரெட்மி நோட் 10 மாடல்கள் மீது அபார தள்ளுபடி.. உடனே முந்துங்க..இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. ரெட்மி நோட் 10 மாடல்கள் மீது அபார தள்ளுபடி.. உடனே முந்துங்க..

இந்த நன்மைக்கு வரம்பே இல்லை.. ஆனால் இதற்கு மட்டும் வரம்பு இருக்கிறது

இந்த நன்மைக்கு வரம்பே இல்லை.. ஆனால் இதற்கு மட்டும் வரம்பு இருக்கிறது

டேட்டா பலன்களின் அடிப்படையில் இது மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுடன் போட்டியிடவில்லை என்றாலும் கூட, இது 4G நெட்வொர்க் மூலம் உலகத்துடன் இணைந்திருக்க விரும்பும் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும், மேலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குரல் அழைப்புகளைச் செய்யலாம் என்பதே இந்த திட்டத்தின் தலைசிறந்த நன்மையாகும். Vodafone Idea வழங்கும் ரூ. 1,499 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் 365 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் மொத்தமாக 24 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். பயனர் விரும்பினால், இந்தத் தரவை முடிந்தவரை அனைத்தையும் ஒரே நாளில் பயன்படுத்தலாம்.

365 நாட்கள் வேலிடிட்டி 4G நெட்வொர்க்குடன் இணைப்பு

365 நாட்கள் வேலிடிட்டி 4G நெட்வொர்க்குடன் இணைப்பு

விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் முதன்மையாகக் குரல் அழைப்புகளைச் செய்ய விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகளை அதிகமாகப் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக இந்தத் திட்டம் உருவாக்கப்படவில்லை. இது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது பயனர்கள் குரல் அழைப்பு நன்மையை ஆண்டு முழுவதும் எந்த தடையுமின்றி 4G நெட்வொர்க்குடன் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?

கூடுதல் நன்மையுடன் OTT நன்மைகளும் கிடைக்கிறதா?

கூடுதல் நன்மையுடன் OTT நன்மைகளும் கிடைக்கிறதா?

ரூ. 1,499 ப்ரீபெய்ட் திட்டமானது பயனர்களுக்கு 3600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதைப் பயன்படுத்தாவிட்டால், பயனர்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு SMS அனுப்ப முடியாது.வோடபோன் ஐடியா பயனர்களுக்கு Vi Movies & TV Basic இன் இலவச ஓவர்-தி-டாப் (OTT) நன்மையையும் வழங்குகிறது. இந்த OTT நன்மையின் மூலம், பயனர்கள் நிறுவனத்தின் மொபைல் செயலியில் நேரடியாகச் செய்திகளைப் பார்க்கலாம், நேரலை டிவி, திரைப்படங்கள் மற்றும் அசல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

ரூ.16 விலையில் 4G டேட்டா வவுச்சர் திட்டங்கள்

ரூ.16 விலையில் 4G டேட்டா வவுச்சர் திட்டங்கள்

இருப்பினும், 24ஜிபி டேட்டா உங்களுக்குக் குறைவாக இருந்தால், நிறுவனத்திடமிருந்து வாங்கக்கூடிய 4ஜி டேட்டா வவுச்சர்கள் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். Vodafone Idea மொத்தம் ஆறு 4G டேட்டா வவுச்சர்களை திட்டங்களைத் தன்வசம் வைத்துள்ளது. இந்த 4G டேட்டா வவுச்சர் திட்டங்கள் ரூ.16 விலையில் இருந்து 1ஜிபி டேட்டா நன்மை வழங்கும் திட்டத்திலிருந்து தொடங்கி ரூ. 601 விலையில் 75ஜிபி டேட்டாவை, 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் இலவச OTT நன்மை உடன் வருகிறது.

இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

முக்கியமாக 'SMS' நன்மை மீது கவனம் செலுத்துங்கள்

முக்கியமாக 'SMS' நன்மை மீது கவனம் செலுத்துங்கள்

இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் நீங்கள் உன்னிப்பாக இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும். காரணம், இந்தத் திட்டத்தின் SMS பலன்கள் தீர்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களுக்கு SMS அனுப்பவே முடியாது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் Vodafone Idea நிறுவனம் இனி பயனர்களுக்கு SMS பேக்குகளை வழங்காது. முழு வருடத்திற்கும் 3600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே இருப்பதால், பயனர்கள் எஸ்எம்எஸ்களை கவனமாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.

யாருக்கெல்லாம் இந்த திட்டம் சிறப்பானது?

யாருக்கெல்லாம் இந்த திட்டம் சிறப்பானது?

டேட்டாவைப் பொறுத்தவரை, பயனர்களுக்கு 4ஜி டேட்டா வவுச்சர்கள் வாங்கத் தயாராக இருக்கும் வரை, அதில் பற்றாக்குறை இருக்காது . இந்த திட்டம் முதலில் டேட்டாவை அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கும், பின்னர் பெரும்பாலும் பிராட்பேண்ட் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் ஏற்றது. அதிலும் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் முழுதும் இவர்கள் வாய்ஸ் கால் நன்மையைத் தடையில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது சிறப்பு. நீங்கள் அதிகம் பேசும் நபர் என்றால் இந்த திட்டம் நிச்சயம் உங்களுக்கானது தான்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea Provides Very Affordable One Year Validity Prepaid Plan For Just Rs 1499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X