ஒரே கல்லுல ரெண்டு மாங்கா: தினசரி காப்பீட்டு நன்மையுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Vi .!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் (ABHI) உடன் கூட்டு சேர்ந்து தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குச் சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வாங்குவதில் Vi பயனர்களுக்கு இப்போது ABHI -லிருந்து இலவச தினசரி காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது. தினசரி காப்பீட்டுத் தொகை என்றால் என்ன? இதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

வி ஹாஸ்பிகேர் (Vi Hospicare)

வி ஹாஸ்பிகேர் (Vi Hospicare)

இந்த சலுகையை விஐ நிறுவனம் 'வி ஹாஸ்பிகேர் (Vi Hospicare)' என்று பெயரிட்டுள்ளது. இது இந்தியாவில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான முதல் வகையான தயாரிப்பு ஆகும். இந்த சலுகையின் கீழ், ரூ. 51 மற்றும் ரூ. 301 என்ற இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே காப்பீட்டின் பயனுடன் வருகிறது. சம்பந்தப்பட்ட திட்டங்களில் ஒன்றை வாங்கும்போது பயனர்களுக்குத் தினசரி காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்த முடியும்.

 ரூ. 51 வவுச்சர் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ரூ. 51 வவுச்சர் கீழ் கிடைக்கும் நன்மைகள்

வோடபோன் ஐடியா ஹாஸ்பிகேர் அம்சங்கள்
'வி ஹாஸ்பிகேர்' நன்மையுடன் வரும் முதல் வவுச்சர் ரூ. 51 வவுச்சர் ஆகும். இது பயனர்களுக்கு 500 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் குரல் அழைப்பு அல்லது தரவு நன்மைகள் என்று எதுவும் இல்லை. இது 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதன்படி, எந்தவொரு வழக்கமான மருத்துவமனை சிகிச்சைகளுக்குத் தினமும் ரூ. 1,000 மதிப்புடைய காப்பீட்டுத் தொகையைப் பயனர்கள் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்.

மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

 ரூ. 301 வவுச்சர் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ரூ. 301 வவுச்சர் கீழ் கிடைக்கும் நன்மைகள்

பின்னர் காப்பீடு நலனுடன் வரும் இரண்டாவது வவுச்சர் ரூ. 301 வவுச்சராகும். இந்த வவுச்சர் பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என 28 நாட்களுக்கு கிடைக்கிறது. டெல்கோ 2 ஜிபி போனஸ் தரவை வவுச்சருடன் எஃப்யூபி தரவின் மேல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் வழக்கமான மருத்துவமனை சிகிச்சைகளுக்காகத் தினசரி ரூ. 1,000 மதிப்புடைய காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

 இவர்களுக்கு மட்டும் தினசரி காப்பீட்டு தொகை இரட்டிப்பு

இவர்களுக்கு மட்டும் தினசரி காப்பீட்டு தொகை இரட்டிப்பு

இருப்பினும், நோயாளியைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதித்தால் இந்த தொகை அப்படியே இரட்டிப்பாகிறது. அதாவது, தினசரி கிடைக்கும் ரூ. 1,000 தொகை ஐசியூ பயனர்களுக்குத் தினசரி ரூ. 2,000 ஆக இரட்டிப்பாகிறது. சம்பந்தப்பட்ட வவுச்சர்களின் ஒவ்வொரு வெற்றிகரமான ரீசார்ஜிலும் பயனருக்கான காப்பீட்டுத் தொகை 28 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

மேலும், சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் படி காப்பீட்டுத் தொகையைப் பெற பயனர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. அதேபோல், எந்தவொரு நிகழ்விற்கும், 10 நாட்களுக்கு மட்டுமே காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Prepaid Users Will Get Benefit of Aditya Birla Health Insurance : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X