Home
News

தினசரி 3ஜிபி டேட்டா தரும் வோடபோன் ஐடியாவின் அட்டகாசமான திட்டங்கள்.!

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான சலுகைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் இலசவச சலுகையை அறிவித்துள்ளது. அதாவது குறைந்த வருமானம் கொண்ட 60 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

ஐடியா நிறுவனம் தற்போது குறைந்

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 பேக்கை இலவசமாகவழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.49 பேக் ஆனது 100எம்பி டேட்டா, ரூ.38 க்கான டாக் டைம்நன்மையைக் கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இந்த ரூ.79-பேக்கில்

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.79 காம்போ வவுச்சர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.79-பேக்கில் 200எம்பி டேட்டா, ரூ.128 டாக் டைம் நன்மைகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இப்போது
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தினசரி 3ஜிபி டேட்டா தரும் திட்டத்தைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, போனஸ் டேட்டா உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் Disney+ Hotstar, Vi movies & TV இலவச அணுகல் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.இதுதவிர வரம்பற்ற இலவச அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ்,வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகை, போனஸ் டேட்டா உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.மேலும் இந்த திட்டத்தில் Disney+ Hotstar, Vi movies & TV இலவச அணுகல் கிடைக்கும்.

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவங்களின் திட்டம்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவங்களின் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.448 திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றிக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

 ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதல் டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச அணுகல் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த ஜயோ திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea prepaid plans that offer 3GB of data daily: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X