திரும்பி வந்த பழைய நன்மை.. Vodafone Idea கஸ்டமர்களுக்கு யோகம் தான்.. எந்த லிமிட்டும் இல்லை!
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆக இருந்தாலும் கூட வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) நிறுவனம் ஆனது "உண்மையான" அன்லிமிடெட் டேட்டா பிளான்களை வழங்கி வருகிறது.
உண்மையான அன்லிமிடெட் டேட்டா என்றால்.. எப்படி? விஐ நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் வழியாக "உண்மையான" அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் ப்ரீபெய்டு திட்டங்களும் கூட அன்லிமிடெட் டேட்டாவுடன் வந்தாலும், அவைகள் 300ஜிபி என்கிற டேட்டா லிமிட்டை கொண்டுள்ளன. ஆனால் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் எந்த வகையான டேட்டா வரம்புகளும் இல்லாமல் வருகின்றன.

வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் எப்ஏக்யூ (FAQ) பிரிவில், அதாவது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions) பிரிவில், "போஸ்ட்பெய்டு அன்லிமிடெட் பிளான்கள் ஆனது எந்த வரம்பும் இல்லாமல் உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன" என்று விஐ நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
எல்லா வட்டங்களிலும் கிடைக்கிறதா? இது ஒரு சுவாரஸ்யமான சலுகை ஆகும், ஆனால் இது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் வட்டத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைத்தால், அந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா பயன்பாட்டில் ஏதேனும் வரம்புகள் உள்ளதா என்பதை புரிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவையை நீங்கள் அணுகலாம்.
எந்தெந்த திட்டங்களில் கிடைக்கிறது? நாம் பேசும் அன்லிமிடெட் டேட்டா நன்மையானது ரூ.451, ரூ.551 மற்றும் ரூ.751 விலையில் உள்ள திட்டங்களில் உள்ளது. முன்னதாக எந்த தரவு வரம்புகளும் இல்லாமல் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்கிய பல திட்டங்கள் விஐ நிறுவனத்திடம் இருந்தது. தற்போது அந்த நன்மை மெல்ல மெல்ல திரும்புகிறது
இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த நன்மை மாதத்திற்கு ரூ.451 செலவாகும் மிகவும் மலிவான போஸ்ட்பெய்டு திட்டதிலும் கிடைக்கும் (ரூ.451 என்பது வரிகள் சேர்க்கப்படாத விலையாகும்). மீண்டும் 2 விஷயங்களை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறோம். ஒன்று - இது போஸ்ட்பெய்டு பயனர்களுக்கானது. இரண்டாவது - வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொண்டு, உங்கள் வட்டத்தில் இந்த திட்டங்கள் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறதா என்பதை கேட்டறிந்த பின்னர், ரீசார்ஜ் செய்யவும்.
சமீபத்தில் இந்நிறுவனம் புதிய ரெட்எக்ஸ் ரூ.1601 திட்டத்தை அறிவித்தது. இது அன்லிமிடெட் 4ஜி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டம் 4ஜி மற்றும் 5ஜி பயனர்கள் ஆகிய இருவருக்கும் சிறந்ததாக உள்ளது. விஐ நிறுவனத்தின் கூற்றுப்படி இது வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவை மட்டுமன்றி சர்வதேச ரோமிங் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏராளமான எண்டர்டெயின்மெண்ட், டிராவல் மற்றும் லைஃப்ஸ்டைல் சலுகைகளை வழங்கும் ஒரு பேமிலி போஸ்ட்பெய்டு திட்டமாகும்.
அப்படி என்னென்ன நன்மைகள்? 2 மெம்பர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,601 என்கிற விலையில் வழங்கப்படும் இந்த திட்டம், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதத்திற்கு வரம்பற்ற டேட்டா (4ஜி / 5ஜி), வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ஒரே மாதிரியான முக்கிய நன்மைகளை வழங்கும் இந்த திட்டத்தில் தலா ரூ.299 க்கு கூடுதல் உறுப்பினர்களையும் சேர்க்கலாம்.
என்டர்டெயிமென்ட் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime),ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனி லைவ் (SonyLIV) போன்ற ஓடிடி (OTT) தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். அதாவது இந்த திட்டம் வழக்கமான நன்மைகளுடன் ஒரு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. டிராவல் மற்றும் லைஃப்ஸ்டைல் நன்மைகளை பற்றி விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications