ஏர்டெல்லுக்கு சவால் விடும் Vi ரூ.100 & ரூ.200 ரீசார்ஜ்.! அப்படியென்ன நன்மைகள் கிடைக்கும்?

|

Vi எனும் Vodafone Idea நிறுவனம் தொடர்ந்து பல புதிய மாற்றங்களை செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் சுவாரசியமாக, வி நிறுவனத்தின் போட்டித்தன்மை மிக்க ரீசார்ஜ் போஸ்ட்பெயிட் திட்டங்களின் கீழ் சில மலிவான திட்டங்களும் உள்ளது. அதே சமயம் சில குறிப்பிடத்தக்க திட்டங்களும் உள்ளன.

ஒவ்வொரு மாதமும்

இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல அளவிலான டேட்டா பயனுடன் சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்கிறது. பின்பு ஒதுக்கப்பட்ட வரம்பை விட அதிகமான டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு, இந்த டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து இரண்டு 'டேட்டா பேக்குகள்' அணுக கிடைக்கின்றன.

ரூ.100 மற்றும் ரூ.200 ஆகும்

அதன்படி வோடபோன் ஐடியா நிறுவவனத்தின் இந்த 2 திட்டங்களும், விலை அடிப்படையில் போட்டியாளரான ஏர்டெல்லுடன் மிகவும் ஒத்தவை, ஆனால் வோடபோன் ஐடியா வழங்கும் டேட்டா நன்மையானது சற்று அதிகமாக உள்ளது. நாம் இங்கே பேசும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கான இரண்டு டேட்டா பேக்குகள் ரூ.100 மற்றும் ரூ.200 ஆகும். மேலும் இந்த திட்டங்கள் 50ஜிபி வரையிலான டேட்டா நன்மையை வழங்குகின்றன.அட்டகாச அறிவிப்பு:

ரூ.27,500 தள்ளுபடி- சாம்சங் கேலக்ஸி நோட் 10 வாங்க சரியான நேரம்!ரூ.27,500 தள்ளுபடி- சாம்சங் கேலக்ஸி நோட் 10 வாங்க சரியான நேரம்!

இது ஏற்கனவே உள்ள

அதன்படி வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் கிடைக்கும் முதல் டேட்டா பேக்கின் விலை ரூ.100 ஆகும். இதுஏற்கனவே உள்ள போஸ்ட்பெய்ட் திட்டத்தின் டேட்டா நன்மைக்கு மேல் ஒரு பயனருக்கு 20ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது.

இது ஒரு பயனருக்கு 50ஜிபி

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இரண்டாவது போஸ்ட்பெய்ட் டேட்டா பேக்கின் விலை ரூ.200 ஆகும். இது ஒரு பயனருக்கு 50ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது.

15ஜிபி மற்றும் 35ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா ந

ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இதேபோன்ற விலை நிர்ணயம் கொண்ட டேட்டா பேக்குகளை கொண்டுள்ளது. ஆனால் அவைகள் முறையே 15ஜிபி மற்றும் 35ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா நன்மைகளையே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கால்

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கால் சென்டரை அழைப்பதன் மூலம் இந்த டேட்டா பேக்குகளை நீங்கள் ஆக்டிவேட் மற்றும் டிஆக்டிவேட் செய்யலாம். ஆனாலும் டெலிகாம் டால்க் வலைத்தளத்தின்படி, vi நிறுவனத்தின் மொபைல் ஆப் வழியாக இந்த டேட்டா பேக்குகளை அணுக முடியவில்லை.

 தனது ஜியோ போஸ்ட்பெய்ட்

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களுடன் இம்மாதிரியான டேட்டா பேக்குகளை வழங்கவில்லை. ஒரு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்ட பயனர் ஒதுக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்தி விட்டால், ஜியோ நிறுவனம் ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்க தொடங்கும்.

ஜிபிக்கு ரூ.20 வசூலிக்கத்

இதேபோன்ற கூடுதல் கட்டணம் வோடபோன் ஐடியா பயனர்களுக்கும் பொருந்தும். இந்நிறுவனம் இலவச டேட்டா பயன்படுத்திய பின்பு ஒரு ஜிபிக்கு ரூ.20 வசூலிக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்கும் REDX ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம்

வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்கும் REDX ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம்

முன்பு குறிப்பிட்டபடி வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் சில நல்ல போஸ்ட்பெய்ட் திட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுரூ.699-திட்டம் ஆகும். vi என்டர்டெயின்மென்ட் பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் வரம்பற்ற டேட்டா நன்மைகளுடன் வருகிறது (அதாவது 150 ஜிபி டேட்டா என்கிற வரம்பினை கொண்டுள்ளது).

வோடபோன் ஐடியா ரூ.699 திட்டமானது இந்தியாவிற்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவச குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ரூ.999 மதிப்புள்ள அமேசான் ப்ரைம் சந்தா, வி மூவிஸ் மற்றும் டிவி சந்தா, ஜொமாடோ மீதான உணவு ஆர்டர்களுக்கு ரூ.200 வரை தள்ளுபடி மற்றும் ரூ.125 எம்.பி.எல் போன்ற சலுகைகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Postpaid Data Packs Start at Rs 100 and Offer Up to 50GB!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X