Home
News

365 நாளும் இலவச டேட்டா வேண்டுமா? இந்த ரீசார்ஜ் பிளானை பாருங்க! அன்லிமிடெட் நன்மைகள்!

365 நாளும் எந்த நெட்வொர்க்காவது இலவசமாக டேட்டா நன்மையை வழங்குமா? என்று உங்களில் பலர் சந்தேகத்துடன் மனதில் ஒரு கேள்வியை எழுப்பியிருப்பீர்கள். உண்மையை சொல்ல போனால், இப்படி ஒரு நன்மையை வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் வழங்கி வருகிறது.

வோடபோன் ஐடியா-வின் (Vodafone Idea) ஒரு வருட ரீசார்ஜ் திட்டங்களுடன் உங்களுக்கு 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் தினசரி டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் இலவச டேட்டாவும் கிடைக்கிறது. இது தவிர, வருடாந்திர திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இரவு நேரம் முழுக்க அன்லிமிடெட் டேட்டாவை நிறுவனம் தற்போது இலவசமாக வழங்குகிறது. இதை நிறுவனம் பிங்கே ஆள் நைட் (Binge all night) சலுகை என்ற பெயரில் வழங்கி வருகிறது.

365 நாளும் இலவச டேட்டா வேண்டுமா? இந்த ரீசார்ஜ் பிளானை பாருங்க!

இத்துடன் இன்னும் பல ஏராளமான நம்ப முடியாத நன்மைகள் மற்றும் சலுகைகளை Vi தற்போது அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதை பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம். Vi ரூ. 2899 திட்டம் உங்களுக்கு 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன், தினசரி 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இலவச வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

இத்துடன் இரவு முழுக்க அணுக கிடைக்கும் Binge all night - இலவச அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் வழங்குகிறது. இன்னும் கூடுதலாக Vi ஹீரோ அன்லிமிடெட், வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர், டேட்டா டிலைட், Vi மூவீஸ் மற்றும் டிவி VIP அணுகல், எக்ஸ்ட்ரா இலவசமாக 50ஜிபி டேட்டா போன்ற நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நன்மையை வேற எந்தவொரு நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, Vi ரூ.2,999 திட்டம் ஒட்டுமொத்தமாக 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் 850ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இத்துடன் இலவச வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. Binge all night - இலவச அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் இத்துடன் கிடைக்கிறது. இதன் மூலம் வருடம் முழுக்க இரவு நேரத்தில் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இறுதியாக, நிறுவனம் வழங்கும் ரூ.3,099 திட்டத்தை பற்றி பார்க்கையில், இந்த ரீசார்ஜ் திட்டம் 365 நாள் செல்லுபடியாகும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இத்துடன் இலவச வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. Binge all night - இலவச அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் இத்துடன் கிடைக்கிறது. கூடுதலாக Vi ஹீரோ அன்லிமிடெட், வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவர், டேட்டா டிலைட் நன்மையை வழங்குகிறது.

பொழுபோக்கு அம்சங்களை பொறுத்த வரையில், இந்த திட்டம் Vi மூவீஸ் மற்றும் டிவி VIP அணுகல், எக்ஸ்ட்ரா இலவசமாக 50ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா போன்ற நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 365 நாட்களுக்கு இரவு முழுக்க இலவச டேட்டா வேண்டுமா? அதுவும் வரம்பே இல்லாமல் அன்லிமிடெட் ஆக வேண்டுமா? அப்போ, இந்த திட்டங்களை பாருங்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Plans with 365 Days Validity That Offers Binge All Night Free Data Benefit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X