ஜியோவை அடித்து விரட்ட ரூ. 20,000 கோடி களமிறக்கும் வோடபோன் ஐடியா.!

சலுகைகள் மட்டும் அல்லாமல் ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரும் சக்தியாக இருந்தது. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மூடுவிழா கண்டன. இந்நிலையில், ஜியோவை சமாளிக்கும் வகையில், ரூ,2

|

ஜியோ நிறுவனத்தை அடித்து விரட்ட ரூ.20,000 கோடியை களமிறங்குகின்றது வோடாபோன் ஐடியா நிறுவனம்.

ஜியோ நிறுவனம் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருவதால், மற்ற நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. மற்ற நிறுவனங்களும் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை.

ஜியோவை அடித்து  நொருக்க 20,000 கோடி களமிறக்கும் வோடபோன் ஐடியா.!

சலுகைகள் மட்டும் அல்லாமல் ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரும் சக்தியாக இருந்தது. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மூடுவிழா கண்டன.

இந்நிலையில், ஜியோவை சமாளிக்கும் வகையில், ரூ,20,000 கோடியை வோடபோன் ஐடியா நிறுவனம் முதலீடு செய்கின்றது.

 ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

இன்று வரை ஜியோ நிறுவனம் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. இதனால் குறைந்த காலத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றது.

தொழில்நுட்பத்தில் வோல்ட் இ மற்றும் கால் டிராப் பிரச்னை சிக்காமலும் சேவையாற்றி வருகின்றது.

ரிலையன்ஸ், ஏர்செல் மூடுவிழா:

ரிலையன்ஸ், ஏர்செல் மூடுவிழா:

ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் ஜியோ வருகைக்கு பிறகு கடும் நலிவடைந்தன. அந்த நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் திவால் ஆனது. இதனால் ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் மூடு விழா கண்டன.

ஏர்டெல், வோடபோன், ஐடியா, டோகோமோ:

ஏர்டெல், வோடபோன், ஐடியா, டோகோமோ:

ஏர்டெல், வோடாபோன், ஐடியா, டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை தடுக்க மாதம் குறைந்த பட்சம் ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் விதிமுறைகளை அமல்படுத்திக் கொண்டன.

வோடபோன்-ஐடியா :

வோடபோன்-ஐடியா :

இதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ளது நஷ்டத்தை களைய வோடபோன்-ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்தன. இதனால் ஓரளவு தொலைபேசி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டம் சரிக்குள் வரும் என்று நம்பின. இருந்த போதும் ஜியோ தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.
இதனால் லாபத்தையும் அள்ளி குவித்து வருகின்றது ஜியோ.
நஷ்டத்தை தவிர்க்க பதிய பிளானை வகுத்துள்ளது வோடபோன் ஐடியா.

20,000 கோடி முதலீடு :

20,000 கோடி முதலீடு :

இந்த நிலையில் நெட்வொர்க்கை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார்.

 நிதி திரட்ட முடிவு:

நிதி திரட்ட முடிவு:

இத்துடன் உரிமை பங்குகளை வெளியிட்டு 25,000 கோடி ரூபாய் திரட்டவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
vodafone idea plans rs 20k cr network investment over next 15 mths : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X