இனிமேல் FREE.. Sun NXT பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. சத்தம் போடாமல் Vodafone Idea பார்த்த வேலை!
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, ஓடிடி பிளாட்பார்ம் ஆன சன் நெக்ஸ்ட் (Sun NXT) உடனான ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்கீழ் சன் நெக்ஸ்ட் பிளாட்ஃபார்மின் கீழ் வரும் பல்வேறு தென்னிந்திய திரைப்படங்கள் (South Indian movies), எக்ஸ்க்ளூஸிவ் சீரீஸ்கள் (, exclusive series) மற்றும் லைவ் டிவிகள் (Live TV) ஆனது வோடாபோன் ஐடியா சேவைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu), மலையாளம் (Malayalam), கன்னடம் (Kannadam), பெங்காலி (Bengali), மராத்தி (Marathi) மற்றும் இந்தி (Hindi) ஆகிய ஏழு மொழிகளில் கிடைக்கும் சன் நெக்ஸ்ட் பிரீமியம் கன்டென்ட்கள் (Sun NXT Premium Content) ஆனது வோடபோன் ஐடியாவின் கீழ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சன் நெக்ஸ்ட்-ன் பிரீமியம் கன்டென்ட்கள் ஆனது விஐ மூவீஸ் அன்ட் டிவி பிளஸ் (Vi Movies and TV Plus Pack) பேக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் விஐ மூவீஸ் அன்ட் டிவி பிளஸ் பேக் ஆனது மாதம் ரூ.248 க்கும் மற்றும் விஐ மூவீஸ் அன்ட் டிவி லைட் பேக் (Vi Movies and TV Lite Pack) ஆனது மாதம் ரூ.154 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. தற்போது இந்த பேக்களில் சன் நெக்ஸ்ட் கன்டென்ட்கள் ஆனது எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆக இனிமேல் வோடாபோன் ஐடியா பயனர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் மனோரமாமேக்ஸ் (ManoramaMax) போன்ற மற்ற ஓடிடி இயங்குதளங்களுடன் சன் நெக்ஸ்ட் பிளாட்ஃபார்யும் - விஐ மூவீஸ் அன்ட் டிவி சேவை வழியாக - அணுகலாம்!
சன் நெக்ஸ்ட் உடனான இந்த கூட்டணி தொடர்பான விளக்கத்தில் சமீபத்திய FICCI-EY ஆய்வு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தி மொழி கன்டென்ட் உடன் ஒப்பிடும்போது பிராந்திய ஓடிடி ஆனது 52% பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இது ஓடிடி இயங்குதளங்களில் பிராந்திய மொழி கன்டென்ட்டிற்கான வளர்ந்து வரும் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விஐ மூவீஸ் அன்ட் டிவி போர்ட்ஃபோலியோவானது, பயனர்களின் பல்வேறு விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்காலி கன்டென்ட்டிற்கான கிளிக் (Klikk), பஞ்சாபி கன்டென்ட்டிற்கான சௌபால் (Chaupal), மலையாள கன்டென்ட்டிற்கான மனோரமாமேக்ஸ் மற்றும் கன்னட கன்டென்ட்டிற்கான நம்மபிளிக்ஸ் (Nammaflix) போன்றவைகளுடன் தற்போது தமிழ் கன்டென்ட்டிற்கான சன் நெக்ஸ்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
சன் நெக்ஸ்ட் இணைப்பின் மூலம், விஐ மூவீஸ் அன்ட் டிவி வாடிக்கையாளர்கள் தற்போது அண்ணாத்தே, மிருகம் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற பிரபலமான தமிழ் படங்களையும், வேறு பல மொழிகளின் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளையும் ஒரே ஆப் மற்றும் சந்தா மூலம் பார்த்து மகிழ முடியும். சன் நெக்ஸ்ட் உடனான இந்த கூட்டாண்மை மூலம், விஐ மூவீஸ் அன்ட் டிவி பயனர்கள் ஒரே ஆப்பில், ஒரே சந்தாவில் (One app, One subscription) அதிக பிராந்திய பொழுதுபோக்கு கன்டென்ட்டை அனுபவிக்க முடியும் என்று விஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








