5 ப்ரீபெய்ட் திட்டங்களில் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கிய வோடபோன் ஐடியா.!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அண்மையில் இந்நிறுவனம் ரோல்ஓவர் வசதியை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து வி நிறுவனம் அதன் தேர்வுசெய்யப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 5ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையையும் அறிவித்துள்ளது.

அதன்படி வோட்போன் ஐடியா ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டங்களான ரூ.149இ ரூ.219இ ரூ.249இ ரூ.399 மற்றும் ரூ.599 ஆகியவைகள் மீது 5ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா நன்மை அணுக கிடைக்கும்.

அதன்படி வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டங்களான ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ஆகியவைகள் மீது 5ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா நன்மை அணுக கிடைக்கும்.

 எக்ஸ்ட்ரா டேட்டா

குறிப்பாக இந்த எக்ஸ்ட்ரா டேட்டா சலுகைக்கு தகுதி பெற, பயனர்கள் வி நிறுவனத்தின் மொபைல் ஆப் அல்லது வலைத்தளம் வழியாக மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் டேட்டா கிடைக்கும் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 5ப்ரோ 5ஜி: 2021 இல் எங்களின் சிறந்த வீடியோகிராஃபி ஸ்மார்ட்போன் பரிந்துரை இதுவாகும்!

வோடபோன் ஐடியா ரூ.149 திட்டம்:

வோடபோன் ஐடியா ரூ.149 திட்டம்:

வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் ரூ.149 திட்டம் ஆனது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்தியாவில் வரம்பறற் குரல் அழைப்பு நன்மை, 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது ரூ.149 திட்டம். பின்பு எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 1ஜிபி டேட்டாவைப் பெறலாம். குறிப்பாக இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 3 ஜிபி ஆக மாற்றும். MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் மட்டுமே 1ஜிபி கூடுதல் டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன் ஐடியா ரூ.219 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.219 திட்டம்

வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் ரூ.219 திட்டமும் கூடுதல் டேடடா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 1ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற அசத்தலான நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

பின்பு எக்ஸ்ட்ரா டேடடா சலுகையின் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் 2ஜிபி டேட்டாவைப் பெறலாம். மேலும் இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 30ஜிபி ஆகு மாற்றும். பின்பு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, , MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ்கள், போன்ற நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 5ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 47ஜிபி ஆக மாற்றும்.

வோடபோன் ஐடியா ரூ.399 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 திட்டம்

வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் ரூ.399 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தில் 5ஜிபி டேட்டாவைப் பெறலாம். குறிப்பாக MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த 5 ஜிபி கூடுதல் டேட்டாவை பெறலாம்.

வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.599 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு, தனசரி 1.5 டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் எகஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக இந்த திட்டதின் கீழ் 5ஜிபி டேட்டாவைப் பெறமுடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea offers up to 5GB of extra data on 5 prepaid plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X